என் மலர்
திருப்பூர்
- பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
ஊத்துக்குளி,செப்.17-
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ். வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாளையம், மொரட்டு ப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டு புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.
- பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
- பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பாக பொறியாளர்கள் தின விழா சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் ராஜேஷ் தமிழரசன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
சங்க மாநில செயலாளர் பொறியாளர் காந்தி, மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன்,குமார்,ரமேஷ், பொன்னுச்சாமி, ரத்னசபாபதி, மணிகண்டன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.
- உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கடற்கரை கையுந்துபந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.
உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர். இறகு பந்து மூத்தோர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பெற்றனர். சதுரங்கப்போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக இளையோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.
குறுமைய அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டு போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து 9 வருடங்களாக ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
- ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
திருப்பூர்,செப்.17-
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்கள் விநாயகர் பற்றிய ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் நிறைவாக விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவை கொண்டாடி மகிழந்தனர்.
- முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டும் அவரது பிறப்பின் வரலாற்றைக் கூறும் விதமாக நாடகம் நடத்தியும் பாடல்கள் பாடினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் ,துணைசெயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
- காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
- மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம்.
தாராபுரம்:
காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு-
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தொடர் மழையால் ஒரு சில இடங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும்.
பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளில் சுற்றுவேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளிகிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மன்னார்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 4 ெரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து தினமும் நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (எண்: 16616) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக சென்று காலை 7:40 மணிக்கு மன்னார்குடி செல்கிறது. மறுமார்க்கமாக இரவு 8:25 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோவை வந்து சேருகிறது.
கோவையில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக தினமும் இரவு 7:35 மணிக்கு நாகர்கோவிலுக்கு ெரயில் (எண்: 22668) இயக்கப்படுகிறது. இந்த ெரயில், மறுமார்க்கமாக புறப்படும் ெரயில் ஆகிய 4 ெரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது
இவற்றுடன், கன்னியாகுமரி - புனே (எண்: 16382), சென்னையில் இருந்து கரூர், சேலம் வழியாக போடிக்கு இயக்கப்படும் சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.
திருப்பூர்:
பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு நடப்பதால், அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வெழுத வைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதை நகலெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டு முழுமையாக நடந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-
பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.
தற்போது தொடர் விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் காலாண்டு தேர்வில், 100 சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
- 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்போது வாயடைத்து போய் உள்ளனர்.
- தி.மு.க., அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்து கொண்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பெதப்பம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்போது வாயடைத்து போய் உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதலமைச்சராகும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க., அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றார்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
அ.தி.மு.க. ஆட்சியில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் ரூ. 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள்- நலத்திட்டங்களை தற்போது தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.
- அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
- சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
குண்டடம்:
குண்டடம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
இது குறித்து குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. சசிகலா தெரிவித்துள்ளதாவது:-
குண்டடம் வட்டாரத்தில் வேளாண்மை துறை அலுவலர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டில் சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும், தொடர்புடைய தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக, மானிய முறையில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மற்றும் மின் இணைப்பு முழு மானியத்தில் பெறப்பட்டு மற்றும் தரிசு நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க பல்லாண்டு காய்கறிப் பயிர்கள் மற்றும் பழமரச் செடிகள் தோட்டக்கலைத் துறையினால் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த கள ஆய்வினை சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய தரிசு நிலத்தொகுப்புகளில் மேற்கொண்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் வட்டார தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை பிற அரசு துறை அலுவலர்கள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் விவசாயிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார்.
- உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதுறை ஊராட்சி உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
மருதுறை ஊராட்சிக்குட்பட்ட சின்ன புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் தனியார் பனியன் நிறுவன சூப்பர்வைசர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.மேலும் மருதுறை ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 அடி தூரத்தில் உள்ள நொய்யல் ஆற்றை கடந்தால் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம பகுதிகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து மருதுறை ஊராட்சி கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், வாகன சோதனையை தீவிரபடுத்தவும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கவும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி காங்கயம் போலீசார் தற்போது மருதுறை பஸ் நிறுத்தத்தில் பட்டீஸ்வரர் கோவில் முன்புறம் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.
இதில் 24 மணி நேரமும் போலீசார் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து இருசக்கர, கனரக வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து முகவரி, ஆதார் கார்டு, செல்போன் எண், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பெற்று சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






