என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
- வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
திருப்பூர்-
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவர் தங்கியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதையடுத்து உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை அங்குள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு தரதரவென இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இன்று காலை பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்தவரின் உருவம் மற்றும் பெண்ணின் உடலை இழுத்து செல்லும் காட்சிகள் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர். மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவை சாலைகள் சந்திக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது
- தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவிநாசி :
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஈரோடு, திருப்பூா், கோவை சாலைகள் சந்திக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவுண்டானவில் அவிநாசி சுதந்திர போராட்ட தியாகியும், அவிநாசியில் வாரச்சந்தை, கல்வி நிலையங்கள் அமைய பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக அளித்த தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் தன்னாா்வலா்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனா். பூங்காவில், காளை மாடு, ஆடு, மான், பறவை, படகு உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனா். தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டான பூங்கா, நினைவு கல்வெட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
- 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
- அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.
- தவறான பாதையில் செல்வதை தடுப்பதற்கும் விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும்
திருப்பூர் :
நாட்டு நலப்பணித் திட்ட தின வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.
இதன் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் பேசியதாவது:-
மாணவா்கள் சமூக வலைதளங்களில் ஈடுபடுவதை தவிா்த்துவிட்டு தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாட வேண்டும். மேலும், புதிதாக விளையாட்டுகளை கற்றுக்கொள்ளுங்கள். உடல் வலிமையாக இருப்பதற்கும், மனதை ஒருங்கிணைத்து கவனச்சிதறலை தவிா்ப்பதற்கும், தவறான பாதையில் செல்வதை தடுப்பதற்கும் விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும். எனவே மாணவா்கள் தினமும் விளையாடுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக கபடி, இறகுப்பந்து, வலைபந்து, சதுரங்கம், கேரம், தொடரோட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வருகிற செப்டம்பா் 24 -ந் தேதி வழங்கப்பட உள்ளன.
- உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
- தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி அளித்து வருகிறாா்.
காங்கயம் :
விளையாட்டு மைதானமோ, நிரந்தர உடற்கல்வி ஆசிரியரோ இல்லாத நிலையிலும் பெரிய இல்லியம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
காங்கயம் வட்டாரம், பொத்தியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய இல்லியம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2018 ம் ஆண்டு அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் இதுவரை அரசு சாா்பில் உடற்கல்வி ஆசிரியா் நியமிக்கப்படவில்லை. மேலும் பள்ளியில் பெரிய அளவில் விளையாட்டு மைதானமும் இல்லை.
ஆனால் இப்பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆா்வமுடன் பங்கேற்று வந்தனா். இந்நிலையில் மாணவா்களின் விளையாட்டுத் திறனைக்கண்ட பள்ளி நிா்வாகம் மாணவா்களை ஊக்குவிப்பதற்காக பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோா் - ஆசிரியா் கழகம் சாா்பில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் நியமனம் செய்துள்ளனா்.
விளையாட்டு மைதானம் இல்லாததால் தனியாா் வழித்தடத்தை ஓடுபாதையாக மாற்றி மாணவா்களுக்கு தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி அளித்து வருகிறாா்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற காங்கயம் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் இப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் சிறப்பிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இப்பள்ளி மாணவா்கள் 9 போ் முதலிடமும், 4 போ் இரண்டாம் இடமும், ஒருவா் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
அதன்படி மாணவி லக்ஷிதா 3,000 மீட்டா், 1,500 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் முதலிடமும், 100 மீட்டா் தடைத்தாண்டும் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளாா். மாணவி திவ்யா உயரம் தாண்டுதல், தடைத்தாண்டும் ஓட்டம் 100 மீட்டா் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி விஜயலட்சுமி 400 மீட்டா், 600 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் முதலிடமும் பெற்றாா்.
தொடா் ஓட்டம் 100 , 4 பிரிவில் மாணவிகள் பிரிவில் தீக்ஷனா, காஷ்மீரா, விஜயலட்சுமி, திவ்யா ஆகியோரும், மாணவா்கள் பிரிவில் விஷ்வா, ஜீவானந்தம், தினேஷ், மோத்தீஷ் ஆகியோரும் முதலிடம் பிடித்தனா்.மாணவா் விஷ்வா, தடைத்தாண்டும் ஓட்டம் 80 மீட்டா் பிரிவில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், மாணவா் தினேஷ் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தடைத்தாண்டும் ஓட்டம் 80 மீட்டா் பிரிவில் இரண்டாமிடமும், நீளம் தாண்டுதலில் மாணவா் ஜீவானந்தம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனா்.
குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் மணிவேல் ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஈஸ்வரி பாராட்டு தெரிவித்தாா்.
- சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
- பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் அங்கன்வாடி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் விநாயகர் மற்றும் முருகன் வேடம் அணிந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா, மற்றும் உதவியாளர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது.
- இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிலையில் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக வந்த இஸ்லாமிய மக்களை மகாகணபதி கோவில் முன்பு அவர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது :- பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.
மதங்களை கடந்து மனித நேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
- நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது
பல்லடம்:
பல்லடம் அருகே, கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:- கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் மந்தராசலம் என்ற விவசாயி கடன் பெற்றிருந்தார்.
அந்தக் கடனுக்கான வைப்பு தொகையை கடந்த 5 மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமலும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை வழங்காமலும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து காலம் தாமதம் செய்து வந்தது. எனவே காலம் தாழ்த்தி வந்ததை கண்டித்தும், இதே வங்கியில் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அவர்களை அழைத்தனர்.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வைப்புத் தொகையை திருப்பி வழங்கியும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை அவரது வங்கி கணக்கில் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட 603 நபர்களில் 402 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நகை மோசடியில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பி உடனடியாக இழப்பீட்டை வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தது. மேலும் வங்கியில் இருந்து நகையை மீட்டு சென்ற 84 வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஒரு மாத காலத்திற்குள் அவர்களுக்கும் நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் வரதராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள வேப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நவீன் (வயது 21) என்பவர் தனது தாய் சவுந்தரம் (45) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
இதில் தாயும் மகனும் ரோட்டில் விழுந்தனர். தாய் சவுந்திரத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
- விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்.செப்.17-
வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்
- சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
ஊத்துக்குளி,செப்.17-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பெட்டிக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் அங்குள்ள கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சித்தேஸ்வரன் (வயது 3). சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி பார்த்த சுப்பிரமணி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சித்தேஸ்வரன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சித்தேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






