என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26ம் தேதி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது
- திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
- வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
திருப்பூர்-
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story






