search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayakachaturthi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
    • ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

    திருப்பூர்,செப்.17-

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்கள் விநாயகர் பற்றிய ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் நிறைவாக விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டு பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

    ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். 
    ×