காந்திநகர் ஏ.வி.பி. மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
 மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து விழாவில் கலந்து கொண்ட காட்சி.
 மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து விழாவில் கலந்து கொண்ட காட்சி.
Published on

திருப்பூர்,செப்.17-

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர்கள் விநாயகர் வேடமணிந்து குட்டி விநாயகர்களாக வந்து விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்கள் விநாயகர் பற்றிய ஆடல்கள், பாடல்கள் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் நிறைவாக விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com