என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிய காட்சி.
விகாஸ் வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
- மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவை கொண்டாடி மகிழந்தனர்.
- முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டும் அவரது பிறப்பின் வரலாற்றைக் கூறும் விதமாக நாடகம் நடத்தியும் பாடல்கள் பாடினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் ,துணைசெயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
Next Story






