என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
    • அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.

    இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.

    இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.

    இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.

    அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.

    அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.

    தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.

    • சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
    • பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.

    இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.

    இந்த மூன்று வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே சுடுகாட்டிற்கு செல்லும்.வழியில் உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருந்து கிடந்த மின்கம்பியை கறவை மாடு மிதித்தது.
    • அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே தண்டாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா.

    இவர் சம்பவத் தன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்தது.

    எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவத்தினர் காலனியில் மின்கம்பி அருந்து கிடந்தது, அதனை மிதித்த கறவை பசுமாடு பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதேபோன்று, கடந்த முறை மூன்று மாடுகள் இறந்தன, இது இரண்டாவது முறையாகும்.

    அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.

    மின் வாரியத்தில் பல முறை மனுவும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    • கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
    • வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
    நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
    • குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேக தீட்சை நடைபெற்றது.

    சென்ட் அலங்கார குடும்பம், ஸ்ரீ ராஜா வள்ளல், செண்பகவள்ளல் குடும்பம், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தாரின் 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.

    ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பா தீட்சிதர், பத்ரி தீட்சிதர், கல்யாணம் தீட்சிதர், ரவி தீட்சிதர், ஜெகன் தீட்சிதர், ரகு தீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர் தீட்சிதர், முதலிய தீட்சிதர்களும் இதற்காக வெளியூரில் இருந்து ஆசீர்வாதம் வழங்க வந்திருந்த குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்

    அனைவருக்கும் கோயில் பிரசாதம் மாலை மரியாதைகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் உள்துறை சிப்பந்திகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.

    • வீரசோழன் ஆற்றங்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடை உள்ளது.
    • மர்ம நபர்கள் மது பாட்டில்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீழ தூண்டில் விநாயகம் பேட்டை டாஸ்மாக் கடை பூட்டு உடைத்து திருட்டு நடந்துள்ளது.

    இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் பழனிவேல் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்று கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இக்கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கதவு மற்றும் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மது பாட்டில்களையும் விற்பனையான பணத்தையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
    • ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.

    தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.

    அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை.

    நீடாமங்கலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோ ட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகம் புளியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வைரப்பன் (33) அவரின் மனைவி குடும்பபிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோபித்த க்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக வைர ப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பின்னர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு இறந்துள்ளார்

    ஜெயலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்தவரின் பிரேதம் கும்பகோணம் அரசு மருத்து வமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களர்.

    இறந்த வைரப்பனுக்கு மகன் ஹரிஹரன் (6) மகள் சிவானி (3)இருவரும் அவரது அம்மாவுடன் திருப்பூரில் இருந்துள்ளார்கள்

    இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சொந்த அண்ணன் வேலப்பன்(39) என்பவர் வைரப்பனை கட்டையால் தாக்கியது போலீஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அரசாணை 152 ஐ திரும்ப பெற வேண்டும்.
    • அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயில் முன்பு மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாநில பொருளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், சி மற்றும் டி பிரிவு உழியர்களுக்கான அரசு பணிகளை உருவாக்கவும் பதவி உயர்வு மற்றும் மாநகராட்சி நகராட்சி அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை இதனால் ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு ட்பட்ட குளிக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்த மேலாளர் ஒருவர் பணி புரிந்து வருகிறார்.

    இவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை.

    இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

    இங்கு கிராமப் பகுதி என்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணம் பெறக்கூடியவர்களும் ஏழை, எளிய மக்களுமே இந்த வங்கியை பயன்படு த்துவதால் அவர்களுக்கு தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருந்தால்தான் எளிதாக தங்களது சேவையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

    இதனால் அந்த மேலா ளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி முன்பு கிராம மக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிக்கரை, தியாகராஜபுரம், பெருந்தரக்குடி, தேவர்க ண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கு மொழி பேசும் மேலாளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கத்தை எழுப்பினர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு மாத காலமாக போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எனவே உடனடியாக தமிழ் தெரியாத மேலாளரை மாற்றி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மேலாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.
    • துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொற்கைகிராமம் சேவியக்காடு பகுதியில் அமைய உள்ள தீர்த்த புரீஸ்வரர் திருக்கோயிலில் இடம் தேர்வு செய்வது முன்னிட்டு கோயம்புத்துார் ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் தேசிங்கு ராஜபுரம் வந்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளையை சேர்ந்த சென்னை வெற்றிவேல் குமரன், முனைவர் ரவிச்சந்திரன். முனைவர் நா.துரைராயப்பன், சிட்டிபாபு, மடப்புரம் என்.எஸ்.எஸ்.சுப்பையன், வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சென்னை அனிதா குமரன், கவிதா ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அறநிலைய துறை செயல் அலுவலர்விமலா சந்திரன் கலந்து கொண்டார்.

    • மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.
    • வயலுக்கு சென்ற சுப்பிரமணியன் அதை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன்.

    கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளார்.

    அப்போது வயல் அருகே சென்ற மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.

    சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வந்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் பரவாக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×