கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசாணை 152 ஐ திரும்ப பெற வேண்டும்.அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயில் முன்பு மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாநில பொருளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், சி மற்றும் டி பிரிவு உழியர்களுக்கான அரசு பணிகளை உருவாக்கவும் பதவி உயர்வு மற்றும் மாநகராட்சி நகராட்சி அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com