என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேர்த்து திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 5 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

    அதில் 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 568 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
    • பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஷியாம் சுந்தர் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகில் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரச நடவடிக்கைகளில் நீதிபதிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். இந்த முகாமில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.

    இந்த முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கி சாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த முகாமில் வழக்கு முறையிட்டார் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் நடவடிக்கைகளில் நீதிபதிகளை ஈடுபட்டனர். அதில் 1443 மனுக்களுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வழக்குகள் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835க்கான சமரசத்தொகை தொகை முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

    • திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள எண்கன் மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 67). இவரது மனைவி ருக்மணி(59), மகன் இதுநந்தவர்மன்(37), ருக்மணியின் தாயார் கஸ்தூரி(90) ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து காரில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை புஷ்பராஜ் ஓட்டினார்.

    திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பின்னர் காக்காகோட்டூர் பாசன வாய்க்காலில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன்(25) என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

    • கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை.
    • குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
    • அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பு திருட்டு.
    • ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல்.

    இவருக்கு சொந்தமான கதிர் அறுவடை எந்திரத்தில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தனிப்படை அமைத்தார்.

    தனிப்படை போலீசார் பிரான்சிஸ், பாலா, தேவதாஸ், சக்திவேல் ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 22), செல்லப்பா(22), ஆறுமுகம்(28) ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து அலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வீடுகள் இல்லாமல் அவதி பட்ட நிலையில் செல்வராஜ் எம்.பி, மாரிமுத்து எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.

    வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

    துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

    நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

    போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

    இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்‌.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,

    எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

    • பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார்.
    • வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). இவரது மனைவி லட்சுமி. நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுக்க சென்றார். அப்போது பிரிட்ஜ் அருகே 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.

    பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பார்த்த சிலர், கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து ஆடுவது நல்லது என்றும், வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர். இதையடுத்து ஆபத்தை உணராத லட்சுமி ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அந்த பாம்பு முன் வைத்தார்.

    ஆனால் பாம்பு, பாலை குடிக்காமல் தொடர்ந்து படம் எடுத்து ஆடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மேலும் சிலர் லட்சுமி வீட்டிற்கு வந்து அந்த பாம்பை பிடித்து காட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.

    பின்னர் லட்சுமியிடம், பாம்பு வீட்டிற்கு வந்தால் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு அல்லது பாம்புபிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை செய்ய கூடாது என அறிவுரை வழங்கினர்.

    ×