என் மலர்
திருவாரூர்
- அம்மாலூர் கிராமத்தில் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
- பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது.
இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில் சேர்ந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி உள்ளது.
2 நாட்களின் நீர் வடிந்தால் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேடான சித்தாளந்தூர், கடுவெளி, வெள்ளங்கால் கிராமங்களில் தண்ணீர் வடிந்து பிறகு தான் அம்மாலூர் கிராமத்தின் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
அதற்குள் பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரி சாமிநாதன் ஆய்வு செய்தார்.
எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சார பம்பு செட்டு அமைத்து மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வடிகால் ஆற்றில் இறைத்து இக்கிராம விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அம்மலூர் கிராம கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம், பழம் பாண்டி ஆறு பாசன கமிட்டி தலைவர் மோகன், விவசாயிகள் பாண்டி, கேட்டடி துரைராஜ், பூமிநாதன், ஜெயராமன், கணேசன், இளங்கோவன், பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருக்கையில் அமரவைக்கப்பட்டு சால்வை அணிவித்து மாணவி கவுரவிக்கப்பட்டார்.
- மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
மன்னார்குடி:
குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு பள்ளியின் ஒருநாள் தலைமை ஆசிரியராக 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ பதவி வகித்தார்.
நாடுமுழுவதும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அப்பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீக்கு இன்று ஒருநாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மாணவி யுவஸ்ரீ தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவை க்கப்பட்டு சால்வைகள் அணிவித்து மாணவி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் மாணவி யுவஸ்ரீ வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பின்னர் அப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பிரியாணி மதிய உணவாக வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் மித்தேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழிபொய்யாமொழி, இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
- விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
- பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.
தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.
- முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சி விஜில் 2022 ஆப்ரேஷன் ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
முன்னதாக முத்துப்பேட்டை கடலை ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் கடல் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் பகுதியில் பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த 'சி விஜில் 2022 ஆப்ரேஷன்' ஒத்திகையில் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார், கடலோர காவல்படை போலீசார் மற்றும் சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
- 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
திருவாரூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
தொடர் மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதிகளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.
அதைப்போல இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதைப்போலவே 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த தகவலை திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
ஆறுகளில் நீரின் போக்கைதடுக்கும் வகையில் பரவியிருந்த வெங்காயத் தாமரை செடிக ளையும் அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் காயத்ரி கிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
- புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.
வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
- சிறப்பு யாகங்களில் பக்தர்கள் கலந்து ெகாண்டு தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்:
நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார்.
அதேபோல ராமபிராமம் கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புடைய கோவிலின் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
அதற்கான பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா, இன்று காலை சிறப்பு யாகங்களுடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு தொடக்கப்ப ள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கல்வி நலன் மாணவர் நலன் ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும்.
ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்ப டுத்த வேண்டும்.
இதற்கு ரிய நிதியினையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- தூர் வெடித்த பயிரினை கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
- நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம்.
திருவாரூர்:
மழையிலிருந்து சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து ள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூழ் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் நாற்றாங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.
தூர் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் இரகங்களை நடலாம். அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.
நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.
போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பாக்டீரியா இலைக்கருகில் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பெட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.
நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி
வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா.
- நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது.
புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது.
மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.






