search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி
    X

    ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி யுவஸ்ரீ.

    அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி

    • இருக்கையில் அமரவைக்கப்பட்டு சால்வை அணிவித்து மாணவி கவுரவிக்கப்பட்டார்.
    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    மன்னார்குடி:

    குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு பள்ளியின் ஒருநாள் தலைமை ஆசிரியராக 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ பதவி வகித்தார்.

    நாடுமுழுவதும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அப்பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீக்கு இன்று ஒருநாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    மாணவி யுவஸ்ரீ தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவை க்கப்பட்டு சால்வைகள் அணிவித்து மாணவி கௌரவிக்கப்பட்டார்.

    பின்னர் மாணவி யுவஸ்ரீ வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் அப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பிரியாணி மதிய உணவாக வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் மித்தேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழிபொய்யாமொழி, இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×