என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பின்னால் வந்த கார் ராஜன் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த பிரேமாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    களக்காடு:

    திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி, பிளசிங் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் மகன் ராஜன் (வயது32). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில், தாயார் பிரேமாவுடன் (54) நாங்குநேரியில் இருந்து திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். தட்டான்குளம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ராஜன் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது. அப்போது திடீர் என கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பிரேமா படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஏமன்குளத்தை சேர்ந்த ஜோஸ் வேதகுமார் (28) மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • டிசம்பர் 9-ந்தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.
    • சரத்குமாருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத் குமார் கலந்து கொள்கிறார். நெல்லை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங் குளம் கணேசன், இளை ஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்திகுமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி, கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், விவசாய அணி துணை செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முடிவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் நன்றி கூறி னார்.

    இதில் மாவட்ட செயலா ளர்கள் தங்கராஜ், அரசன் பொன்ராஜ், வில்சன், தயாளன், பாஸ்கரன், ஜெய ராஜ், ஸ்டார்வின் தாஸ், பாபு, பிரபு, சிவஞான குரு நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட செயலாளர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், நகராட்சி, பகுதி செயலாளர்கள், அணி செய லாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளா னோர் கலந்து கொண்டனர்.

    • தேவர் உருவப்படத்துக்கு வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திசையன்விளை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராதாபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா,இராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், ராதாபுரம் நீர்பயன்படுத்துவோர் சங்க தலைவர் அய்யப்பன், வர்த்தக அணி கலைவாணி முருகன், கிறிஸ்டோபர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபாபதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், சதீஷ், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனவரி மாதத்திற்கு பின்னர் தினசரி சந்தை திறக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
    • தினசரி சந்தை முன்பு கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் அமைந் துள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயந்தியை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டிலான புதிய பஸ் நிலையம் மற்றும் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தினசரி சந்தை கட்டு மான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும் விரைவில் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

    ரூ.4.5 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பின்னர் தினசரி சந்தை திறக்கப்படும். இதில் வாகனங்கள் முன்பு செல்வ தற்கான வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின் றன.

    மேலும் வள்ளியூர் பேரூராட்சி தீர்மானத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் தினசரி சந்தை முன்பு கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அதனை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் பஸ் நிலைய கட்டுமான பணிகளும் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், கவுன் சிலர்கள், தி.மு.க. பிரமு கர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலையில் 5 மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டியது. பேட்டை, சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

    மாநகரிலும் லேசான சாரல் பெய்தது. காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வருகிறது. அதே நேரத்தில் காலையில் பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காலையில் நெல்லை-தென்காசி நான்கு வழி சாலைகள் தெரியாத அளவிற்கு பனி படர்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரையிலான நிலவரப்படி களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    அதிகபட்சமாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15.4 மில்லிமீட்டரும், நெல்லை, சேரன்மகாதேவியில் தலா 11.5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசத்தில் 84.35 அடியும், சேர்வலாறு அணையில் 96.13 அடியும் நீர் இருப்பு உள்ளது. அந்த அணைகளுக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து நெல் நடவு பாசனத்திற்காக வினாடிக்கு 504 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக அம்பையில் தொடங்கி வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், மாநகர பகுதிகளில் கண்டியப்பேரி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டாவது மழை நன்றாக செழிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்ப இன்னும் 2 அடி நீர் மட்டுமே தேவைப்படுகிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 12.49 அடியே நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சீதோஷண நிலை ஜில்லென மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதும், தணிவதுமாக இருக்கிறது. நேற்றிரவு கனமழையால் மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்த நிலையில், இன்று மழை சற்று குறைந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில் இன்று 55.50 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 1.50 அடி அதிகரித்து 113.25 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், கடனா நதி நீர்மட்டம் 59 அடியாகவும் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாத்தான்குளம், திருச்செந்தூர், கழுகுமலை, காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கீழ அரசடி, சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கழுகுமலை மற்றும் சாத்தான்குளத்தில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் இன்று அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளனர்.

    • போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அருள்ராயனை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்கள் 3 பெண்கள் தானா? அல்லது வேறு சில பெண்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி(வயது 25). இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தபோது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அருள்ராயன்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அருள்ராயன் தன்னை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி என கூறி காயத்ரியை திருமணம் செய்து செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் குடும்பம் நடத்திய நிலையில், அருள்ராயன் மேலும் சில பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் அருள்ராயனை விட்டு பிரிந்துவிட்டார்.

    இந்நிலையில் தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அருள்ராயன் அடிக்கடி காயத்ரிக்கு போன் செய்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் காயத்ரியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த காயத்ரி புளியங்குடி போலீசில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அருள்ராயனை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அருள்ராயன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கவில்லை என்றும், அவர் ராஜபாளையத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் அதிகாரி என கூறி இதேபோல் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்றும், காயத்ரியை 3-வதாக திருமணம் செய்ததும் தெரியவந்தது.

    இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்ற 2 பெண்களும் அருள்ராயன் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் கல்யாண மன்னன் அருள்ராயன் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரை முழுமையாக விசாரித்த பின்னரே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பெண்கள் தானா? அல்லது வேறு சில பெண்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அவர் எதற்காக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? அந்த பெண்களின் நகை, பணத்தை அபகரித்து சொகுசாக வாழ திட்டமிட்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தினாரா? என போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாசை போலீசார் கைது செய்தனர்.
    • முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ்(வயது 50). இவர் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மேலும் கொங்கந்தான்பாறை அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவரது உறவினர் இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்க மரியராஜ் சென்றார். அப்போது மதிய நேரத்தில் கல்லறை தோட்டத்தில் குழி வெட்டுவதை பார்த்து விட்டு திரும்பியபோது அங்கு வந்த அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் தாஸ்(29) என்பவர் அவரை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மரியராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று மாலையில் அவர் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான தாசை தேடி வந்தனர். இன்று அதிகாலை பொன்னாக்குடியில் தனியார் கல்குவாரியில் பதுங்கி இருந்த தாசை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போலீசில் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் உறவினர்கள். நான் டிரைவராக வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில் ஜெயசிங் மரியராஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து காண்டிராக்ட் வேலைகளும் செய்து வந்தார். அப்போது அவருக்கு கட்டுமான பணிகளுக்கு ஜல்லி கற்கள் சப்ளை செய்து வந்தேன்.

    இந்நிலையில் நான் புதிதாக வீடுகட்டி ஓரளவு முன்னேற்றம் அடைந்த நிலையில், அவரது பணத்தை நான் ஏமாற்றி சம்பாதித்து வீடு கட்டி சொகுசாக வாழ்வதாக என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் திட்டிக்கொண்டே இருந்தார். இதனால் நான் நேற்று மதியம் அவரை பார்த்து தட்டிக்கேட்டேன். அப்போது அவர் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்தேன். வாக்குவாதம் முற்றியதில், நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மரியராஜை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்த கொண்டனர். பின்னர் தாசை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நெல்லை சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்தனர்.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலு த்தினர்.

    தி.மு.க.

    தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலை மையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப் பாண்டியன், தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனு மான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னை யா பாண்டியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர் மீரான் மைதீன், சிறுபான்மை அணி முகமது அலி, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன், ஒன்றிய செயலாளர் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், டவுன் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால் கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, வக்கீல் ஜெய பாலன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்க குமார், பொருளாளர் ராஜேஷ் முருகன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் நெல்லை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தனசிங் பாண்டியன், மண்டல தலைவர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து விட்டு பசும்பொன்னுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் நிலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையிலும், பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.
    • நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வரும் அருள்மணி என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாளை கே.டி.சி. நகர் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரை இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நேற்று வக்கீலால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக கூறி போலீஸ் ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதற்கிடையே வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருப்பதாக கூறி நெல்லை மாவட்ட வக்கீல்கள் திரண்டு மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏட்டு பிபினை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள்.

    இந்நிலையில் அந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் பாரதி முருகன், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் முத்துராஜ், உதயகுமார் வழக்கறிஞர்கள் முன்னாள் செயலாளர் செந்தில் குமார் அமல்ராஜ், வினோத் குமார், ராஜா முகமது, லெட்சுமணன், ரமேஷ்,இசக்கி, கார்த்திக், தம்பான், அருண்குமரன், ராஜன்,அஜீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
    • சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ரத வீதிகளில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியா பாரிகளும், பொது மக்க ளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இள ங்கோ தலைமையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    அந்த வகையில் டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.

    இதே போல் தச்சை மண்ட லத்து க்குட்பட்ட வண்ணார் பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியிலும் சுற்றி திரிந்த மாடுகளை மாநக ராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

    உரிய அபராதம் செலுத்தி விட்டு இன்று மாலைக்குள் அதன் உரிமையாளர்கள் மாடு களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இனி மீண்டும் இதே போல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரியவிட்டால் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தருமாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
    • மினி மோட்டாருடன் கூடிய புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க மனோகரன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார்.

    நெல்லை:

    களக்காடு நகராட்சி 12 மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள் அப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன், 12-வது வார்டு ஆவுடைவிலாஸ் தெருவில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டிலும், 20-வது வார்டு மீன்கடை சந்து பகுதியில் ரூ.1.85 லட்சம் மதிப்பிட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மினி மோட்டாருடன் கூடிய புதிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், 20-வது வார்டு உறுப்பினர் சித்ரா, கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×