என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
- பின்னால் வந்த கார் ராஜன் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது.
- விபத்தில் படுகாயம் அடைந்த பிரேமாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி, பிளசிங் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் மகன் ராஜன் (வயது32). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில், தாயார் பிரேமாவுடன் (54) நாங்குநேரியில் இருந்து திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். தட்டான்குளம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ராஜன் மோட்டார் சைக்கிளை முந்தி சென்றது. அப்போது திடீர் என கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பிரேமா படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஏமன்குளத்தை சேர்ந்த ஜோஸ் வேதகுமார் (28) மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






