என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    • வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரின் முயற்சியில் முதுகலை தொல்லியல் துறை பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

    இந்த படிப்பில் 25 மாணவ-மாணவிகள் இப்போது படித்து வருகின்றனர். பேராசிரியர் சுதாகர் இந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறார்.

    தொல்லியல் துணைப் பேராசிரியர் முருகன் மற்றும் துணைப் பேராசிரியர் மதிவாணன், முறைப்படி இந்த மாணவர்களுக்கு தொல்லியல் நுட்பங்களை கற்பித்து வருகின்றனர்.

    வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்த கிராமத்திலிருந்து சுகன்யா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகின்றார்.

    மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக்கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

    இதனைப் பற்றி ஆய்வு செய்ய இந்த துறை பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் படிக்கும் மாணவ-மாணவிகளும் வல்லவன் கோட்டைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு குழுவினர் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு இவ்வூருக்கு வெளியே மாடசாமி கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டில் சந்தன மற்றும் குங்கும திலகமிட்டு கோட்டை மாடசாமி என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    அதாவது வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்தக் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது 1228 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறிந்தனர். தமிழ் என தங்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டு மகிழும் தமிழ் சமூகம் இவ்வளவு பழமையான தமிழ் கல்வெட்டை மக்கள் வணங்குவதில் வியப்பேதும் இல்லை.

    மேலும் இந்த கோவிலுக்கு வடமேற்கே ஒரு கல்வட்டம் உள்ளது. கல்வட்டம் என்பது பல ஈமத்தாழிகளைப் புதைத்த இடம். இந்த இடத்தை அடையாளப்படுத்த தாழியைப் புதைத்த இடத்தைச் சுற்றி பெரிய பாறைகளால் ஒரு வட்டத்தை நம் முன்னோர்கள் உருவாகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கோவில் அருகே உள்ள இந்த வட்டக்கல் வட்டமாக இல்லை.

    மாறாக இது செவ்வக வடிவமாக உள்ளது. இது சுமார் 6 சென்ட் பரப்பளவில் சதுர வடிவில் பெரிய கருங்கல் பாறைகளால் இதனை உருவாக்கியுள்ளனர்.

    இந்த அமைப்பு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • திருட்டு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று உச்சிமாகாளி சிறையில் இருந்தார்.
    • பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் அகதீஸ்வரம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி(வயது 42). இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று அவர் சிறையில் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந்தேதி அவர் திடீர் உடல்நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாளை லூர்து நாதன் சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் பாளை லூர்து நாதன் சிலை அருகில் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கி னார். இளைஞர் காங்கிரஸ் மானூர் வட்டார தலைவர் சாம் வில்லியம்ஸ், பாளை சட்டமன்ற துணை தலைவர் ராஜகுரு, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில ஜவகர் பால் மன்ச் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் வர வேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோபு, நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மரிய குழந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ராம்குமார், நெ ல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலை வர்கள் அருள்ராஜ், அழகை மாரி யப்பன், சிவன் பெருமாள், நெல்லை மாநகர சக்தி சூப்பர் சீ ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா, நெல்லை புறநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ், நெல்லை மாநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராஜாமெர்சி, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வாசிக் அலி, நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லாரன்ஸ் கிறிஸ்டோபர், நெல்லை சட்டமன்ற இளை ஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெரோஸ்கான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திருமலை குமார், மோசஸ், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்கா வலர் பைபாஸ் மெடிக்கல் சண்முக வேலன், முன்னாள் பாளை மண்டல தலைவர் கார்த்தி, வரகுணன், விவசாய பிரிவு அருமை செல்வன், மருதையா பாண்டியன், ஷேக் செய்யது அலி, சிந்தாமதார், அவுலியா மொய்தீன், அபூ பக்கர் சித்திக் உட்பட கா ங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நெ ல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் நன்றி கூறினார்.

    • வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுங்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.
    • வங்கி கணக்கில் உள்ள அமெரிக்க டாலர்களை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள லத்திகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது முகநூல் பக்கத்தை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.

    அப்போது அதில் கொடுக்க ப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்புறம் பேசிய பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை இந்தியாவில் கஷ்டப்படு பவர்களுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

    அதனை உண்மை என்று மாடசாமி நம்பி உள்ளார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கிடையே சில நாட்களில் மாடசாமியை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கி கணக்கில் அமெரிக்க டாலர்கள் இருப்பதை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    அதனை உண்மை என்று நம்பிய மாடசாமி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 300-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் 'சுவிட்ச் -ஆப்' ஆக இருந்துள்ளது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாடசாமி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும்.

    நெல்லை:

    ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண் டாடப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லையில் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் தமிழ்நாடு நாள் இன்று வண்ணார்பேட்டையில் கொண் டாடப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், மாணவ- மாணவி களுக்கும், பொது மக்க ளுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப் பட்டது.

    நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து இதற்காக போராடிய மா.பொ.சி., மார்சல் நேசமணி, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம், விநாயகம், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழ்ச் சான்றோர் பேரவை மாநகர தலைவர் வக்கீல் சுதர்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜபார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன், மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் ம.தி.மு.க. நட ராஜன், த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜமால், நயினார், சுலைமான், மக்கள் இனப்படு கொ லைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் மணி பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இளைஞ ரணி தலைவர் மணிமாறன், பொன்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார்.

    நெல்லை:

    நவம்பர் 1-ந்தேதி உள்ளா ட்சி தினத்தை முன்னிட்டு பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வடக்கூரில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, இணையவழி வரி செலுத்து தல், கிராம தன்னிறைவு திட்டம் 2023-24 மற்றும் 2024-25-க்கு எடுக்கப்பட வேண்டிய பணிகள், பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள ஜாதிய சின்னங்களை அகற்றுதல், ஊராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் மற்றும் ஊராட்சியின் நீடித்த வளர்ச்சி பற்றி விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, மக்கள் நலப் பணியாளர் மாரி யம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, சுகாதார ஆய்வாளர் புகாரி, காச நோய் ஆய்வாளர் காஞ்சனா, கிராம சுகாதார செவிலியர் பூமணி, கிராம நிர்வாக அலுவலர் மைதீன், தலையாரி வேல்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பல வேசம் இசக்கி பாண்டி, ஸ்ரீலதா, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திரா விடர் நல அணி அமை ப்பாளர் செல்லப்பா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, குமரன், வடக்கூர் ஆதி திராவிடர் பள்ளி நிர்வாகி சுந்தரராஜ், பிருந்தாவன் நகர் கார்த்திக், தோட்டக் கலைத்துறை கமலேசன், துணை கமிஷனர் (ஜி.எஸ்.டி.) கதிர்வேல், விஜிலென்ஸ் ஸ்டீபன் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவ லர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கவுரவிக்கப் பட்டனர்.

    • இசக்கிபாண்டி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே உள்ள அ.சாத்தான்குளம் கிராமம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்த வர் ராமச்சந்திரன். இவரது மகன் இசக்கிபாண்டி(வயது 13).

    8-ம் வகுப்பு மாணவன்

    இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவர் ஊரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து மாநகர பஸ்சில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றும் பள்ளிக்கு வந்த இசக்கிபாண்டி, மாலையில் வீட்டுக்கு புறப்பட்டான்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவரது ஊருக்கு செல்லும் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக இசக்கி பாண்டி அவசரமாக பள்ளிக்கு வெளியே வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்கள் கூட்டம் இருந்த நிலையில், வேறு வழியின்றி மாணவன் அந்த பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார்.

    படுகாயம்

    அப்போது பாளை பஸ் நிலையத்திற்கு முன்பாக நூலகம் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக இசக்கிபாண்டி பஸ்சில் இருந்து கீழே விழுந்தான். இதில் இசக்கி பாண்டியின் ஆசனவாய் பகுதி 2 ஆக கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனே பஸ் பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த இசக்கிபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக மாநகர பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாததால் கூட்டம் மிகுந்த பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் இருந்து சேரன்மகா தேவி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது இதே நிலைக்கு தான் தள்ளப்படு கிறார்கள். நேற்று கூட அந்த பள்ளி மாணவர்களை முறையாக நிறுத்தி பஸ்சில் ஏற்றி செல்லாமல் டிரைவர் அவசரமாக பஸ்சை எடுத்து சென்றதால் மாணவர்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி கள் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் மற்றொரு பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    எனவே பள்ளி விடும் நேரங்களில் கிராமப்புறங்க ளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி யிலும் பணியாற்றும் ஆசிரிய ர்கள், பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர்கள் முறையாக நின்று மாணவர்களை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    • கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.
    • 9 கிராம மக்களும் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட பாலாமடை ஊராட்சியில் மேல பாலா மடை, இந்திரா நகர், காட்டாம்புளி உள்ளிட்ட 9 குக்கிரமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தலைவராக பதவி வகித்தவர்கள் ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தை மேல பாலாமடையில் மட்டுமே வைத்து நடத்தி வருகின்றனர்.

    அதனை சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்த வேண்டும், சுழற்சி முறையில் கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை பேசி பெற முடியும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை எடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திலும் இது தொடர்பாக அந்த கிராமங்களின் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்துச் சென்றனர்.

    இந்நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பாலாமடை பஞ்சாயத்திலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த முறையும் 15 ஆண்டுகளாக நடைபெறும் அதே இடத்தில் வைத்து மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த 9 கிராம மக்களும் இன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சி மன்ற பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ஆனாலும் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆர்.டி.ஓ. கார் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 2 அணைகளுக்கும் வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர் மழையால் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 746 கனஅடியாக அதிகரித்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணையில் 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 37 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 504 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 56.35 அடியாக உள்ளது. கொடு முடியாறு அணை தொடர்ந்து 50.50 அடியில் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர்.

    மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை மாநகரில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான தெருக்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அவ்வப்போது பெய்து வரும் மழைக்கே மாநகரில் குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் குளம்போல் தேங்கி கிடப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

    மேலும் சந்திப்பு பஸ் நிலைய பகுதியிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சில தெருக்கள் நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதமான சூழ்நிலை நிலவி வருகின்றது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    ஆழ்வார்குறிச்சி அருகே கடனா நதி மற்றும் கடையம் ராமநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் இன்று காலை நிலவரப்படி 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்து 60 அடியானது.

    மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 30 அடி நீர் இருப்பு உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 28.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி, ஆய்குடியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக தென்காசி மாவட்ட குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. கடம்பூர், கயத்தாறும் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், காடல்குடி ஆகிய இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது. 

    • வண்ணார்பேட்டையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

    நெல்லை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலக முகப்பில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை யில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள்

    எம்.பி. ராமசுப்பு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் துரை செந்தில்குமார், அருள்ராஜ், அய்யப்பன், வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முகம்மது அனஸ் ராஜா, ரசூல் மைதீன், பி.வி.டி. ராஜேந்திரன், கெங்கராஜ், பொதுச் செயலாளர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    • பேச்சிமுத்து, பேரின்பராஜ் 2 பேரும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 55). விவசாயி. இவரது மகன் பேரின்பராஜ். சம்பவத்தன்று 2 பேரும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார். உயிரிழந்த பேச்சிமுத்து தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் ஆவார். இதனால் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணி சேகர், தெற்கு பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆறுமுகம், வைராவிகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாபநாசம், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன், அயன் சிங்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பூதபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×