என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திரா காந்தி உருவச்சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மரியாதை-தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு
- வண்ணார்பேட்டையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.
நெல்லை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலக முகப்பில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை யில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள்
எம்.பி. ராமசுப்பு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் துரை செந்தில்குமார், அருள்ராஜ், அய்யப்பன், வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முகம்மது அனஸ் ராஜா, ரசூல் மைதீன், பி.வி.டி. ராஜேந்திரன், கெங்கராஜ், பொதுச் செயலாளர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.






