search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் கூட்டத்தால் படிக்கட்டில் பயணம்- பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம்
    X

    நெல்லையில் கூட்டத்தால் படிக்கட்டில் பயணம்- பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் படுகாயம்

    • இசக்கிபாண்டி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே உள்ள அ.சாத்தான்குளம் கிராமம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்த வர் ராமச்சந்திரன். இவரது மகன் இசக்கிபாண்டி(வயது 13).

    8-ம் வகுப்பு மாணவன்

    இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவர் ஊரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து மாநகர பஸ்சில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றும் பள்ளிக்கு வந்த இசக்கிபாண்டி, மாலையில் வீட்டுக்கு புறப்பட்டான்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவரது ஊருக்கு செல்லும் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக இசக்கி பாண்டி அவசரமாக பள்ளிக்கு வெளியே வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்கள் கூட்டம் இருந்த நிலையில், வேறு வழியின்றி மாணவன் அந்த பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார்.

    படுகாயம்

    அப்போது பாளை பஸ் நிலையத்திற்கு முன்பாக நூலகம் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக இசக்கிபாண்டி பஸ்சில் இருந்து கீழே விழுந்தான். இதில் இசக்கி பாண்டியின் ஆசனவாய் பகுதி 2 ஆக கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனே பஸ் பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த இசக்கிபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக மாநகர பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாததால் கூட்டம் மிகுந்த பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் இருந்து சேரன்மகா தேவி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது இதே நிலைக்கு தான் தள்ளப்படு கிறார்கள். நேற்று கூட அந்த பள்ளி மாணவர்களை முறையாக நிறுத்தி பஸ்சில் ஏற்றி செல்லாமல் டிரைவர் அவசரமாக பஸ்சை எடுத்து சென்றதால் மாணவர்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி கள் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் மற்றொரு பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    எனவே பள்ளி விடும் நேரங்களில் கிராமப்புறங்க ளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி யிலும் பணியாற்றும் ஆசிரிய ர்கள், பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர்கள் முறையாக நின்று மாணவர்களை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×