என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட குமரி. தண்டனை கைதி உடல் நலக்குறைவால் மரணம்
- திருட்டு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று உச்சிமாகாளி சிறையில் இருந்தார்.
- பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் அகதீஸ்வரம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி(வயது 42). இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று அவர் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி அவர் திடீர் உடல்நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






