என் மலர்
திருநெல்வேலி
- தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
- அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த இன்டர்சிட்டி ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது சரவணன் என்ற வாலிபர் 1-வது நடை மேடையில் சாக்கு பையில் பட்டாசுகள் கொண்டு வந்தார். அவற்றை போலீ சார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போல் அந்த ரெயிலில் ஏறி திருவனந்த புரம் செல்வதற்காக மோனு சுமன்(வயது 41) என்ற நபர் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் 10 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தன.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லை:
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் நெல்லை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சந்திப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் துறையினர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் (உதவி எண் :1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
- களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
களக்காடு:
களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
தண்ணீர் வரத்து
இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இரவில் விடிய, விடிய கனமழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையி லும் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டரும், அதற்கடுத்தபடி யாக களக்காட்டில் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மழையின் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்கு நேரியான் கால்வாயில் திடீர் வெள்ளம் பாய்ந்தோடி யது. வெள்ளத்தால் களக்காடு-சிதம்பரபுரம் தரை பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து நீர்வளத் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம், பாலத்தில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல கோவில்பத்து, கருவேலங்குளம் பாலங்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டது. மேலும் பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலையடிவார கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சிதம்பரபுரத்தில் உள்ள கால்வாய்களில் தூர்வாரப் படாததால், கால்வாய்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, இலவடி அணை யின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கால்வாய்களில் வரும் தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறையினர் கால்வாய், ஆறுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு தலையணை யில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கடந்த 7-ந் தேதி முதல் சுற்றுலா பயணி கள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப் படும் என்று வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.
- 64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
- இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர்.
வள்ளியூர்:
64 - வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடை யிலான தடகள போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கம் 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர் பிரிவில் லனிஷ் ஜோஷுவா 17 வயது பிரிவில் வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் முதல் இடமும், 19 வயது பிரிவில் ஆரிஷ் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், அஸ்வின் வட்டு எறிதல் 3-ம் இடமும், பத்ம தேஜேஷ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் பெற்றனர்.
மாணவிகள் பிரிவில் 14 வயது பிரிவில் சஸ்விகா உயரம் தாண்டுதலில் முதலிடமும், ஷாலினி 400 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் 3-ம் இடமும், 17 வயது பிரிவில் 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் 2-ம் இடமும், 19 வயது பிரிவில் ரோஷ்மா நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும், நாகேஸ்வரி குண்டு எறிதலில் 3-ம் இடமும், 4×100 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும், 4×400 மீட்டர் தொடர் ஒட்ட போட்டியில் முதலிடமும் பெற்றனர்.
இதில் 17 வயது பிரிவில் லனிஷ் ஜோஷீவா வட்டு எறிதல் போட்டியில் புதிய மாநில சாதனை படைத்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலை யாண்டி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
- கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கிப் பாண்டியன், வங்கி மேலாளர்கள் ஜெயராம், சதீஷ்குமார், கால்நடை மருத்துவர்கள் அகன்யா, சிவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வி கறவை மாடுகளை வழங்கி திட்டம் குறித்து விளக்கவுரை உரையாற்றினார். சமூக ஆர்வலர் முருகன் வரவேற்றார்.
தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகலெட்சுமி, தமிழ்நாடு கிராமவங்கி முன்னாள் மேலாளர் அசரப், தி.மு.க. சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சொரிமுத்து, கவுன்சிலர்கள் பாண்டி, செய்யது அலிபாத்து, கைக்கொண்டான் பொன்னுசாமி, சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கறவை மாடுகளை பெறும் பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
- இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் படைப்பாற்றல், புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பொறியியல் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல், புதிய தயாரிப்பு வடிவமைப்பு மூலம் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி எந்திரவியல் துறை மாணவர்கள் பிரவீன், மனோஜ்குமார், ஜோயல் ராஜ், லேவிஷ் பெஸ்ட்ஸ் க்ராஸ்ட்டென் ஆகியோர் பங்கேற்று பவர் ஜெனெரேஷன் குறித்த புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். குறைந்த காற்று வேகத்தில் கூட மின்சாரம் தயாரிக்கலாம் என்ற அடிப்படை அம்சத்தை வழங்கினர்.
இதனை வல்லுநர் குழுவினர் சதீஷ் குமார் சின்ஹா, (ஏ.வி.பி. சஸ்டைனபிலிட்டி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்), சோலிஸ் இந்தியா டெக்னாலஜி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மகாதேவன், ஆசியா மற்றும் பசிபிக் பகுதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மைய ஆலோசகர் உகர்குவன் ஆகியோர் ஆய்வு செய்து எப்.எக்ஸ். கல்லூரி கண்டுபிடிப்புக்கு முதல் பரிசை அறிவித்தனர்.
இதற்கு செஞ்சுரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் சுப்ரியா பட்டநாயக் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக எந்திரவியல் துறை பேராசிரியரும், வடிவமைப்பு அனாலிசிஸ் அப்ளைட் ஆய்வக பொறுப்பாளருமான கண்ணன் செயல்பட்டார். தேசிய அளவில் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் ஹான்சன், அப்ளைட் லேப் தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
- திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52).
- இடைச்சி விளையில் இருந்து திசையன்விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார்.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52). இவர் சம்பவத்தன்று திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு புறப்பட்டார்.
இடைச்சி விளையில் இருந்து திசையன் விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதை அறிந்த மெரினா இது தொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
- உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை:
காலாண்டு வரி உயர்வுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேள னம் அறிவித்தது.
அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தை ஒட்டி நெல்லையில் வெளியூர்க ளில் இருந்து வந்த சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளை, வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள காலாண்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்று கூறி அவர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
+2
- இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். அப்போது மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாத பூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி -அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும்-பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன. அதன்பின் சுவாமி நெல்லையப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
- திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள மாநில தமிழ் சங்க வளாகத்தில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக இள முனைவர் திருக்குறள் கி.பிரபா இறை வேண்டல் பாடினார். இசை தென்றல் அருணா சிவாசி திருவள்ளுவர் வாழ்த்து கூறினார். மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வரவேற்றார். மேயர் சரவணன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கலந்து கொண்டு 6 அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உலகை தமிழால் உயர்த்திடுவோம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என தனது பேச்சை தொடங்கினார்.
நான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் பிறந்தவன். எனது தாயார் சந்தனத்தாய் நினைவாக எங்களது சங்கத்தின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.
தற்போது பாளையங்கோட்டையில் 158-வது திருவள்ளுவர் சிலையை வழங்கி திறந்து வைத்துள்ளேன். திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது. 133 அதிகாரங்களில் 1,330 குறள்களில் ஒன்றே முக்கால் அடியிலே திருவள்ளுவர் உலகத்தை அளந்தார். உலகமெல்லாம் உயர்ந்தார். உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நமது மக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் நல்லாசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் திவான், ராமசாமி, பாண்டியன், கிருபாகரன், வக்கீல் சுதர்சன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை தங்கள் பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- மதவக்குறிச்சியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையில், உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கந்தசாமி, நல்லதம்பி, பொன்னுசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று வந்தனர்.
நான்குவழிச்சாலை பணிகள்
இக்குழுவினர் இன்று காலை நெல்லை சுற்றுலா மாளிகை வந்தடைந்தனர். தொடர்ந்து காலையில் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில், வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள இளங்கோ நகர் மற்றும் தெற்கு புறவழிச்சாலையில் நடை பெறும் நான்குவழிச்சாலை விரிவாக்க பணிகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இளங்கோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை தங்கள் பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மானூர், கங்கைகொண்டான் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுமான பணி
பின்னர் மானூர் அருகே மதவக்குறிச்சியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன்பின்னர் இன்று மதியம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அங்கு ஏற்கனவே மனுக்கள் குழுவால் பெறப்பட்ட மனுக்கள் மீதும், பேரவைக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் குழுவின் அறிக்கையில் குழு பரிந்துரை செய்துள்ள மனுக்களின் மீதும் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
- மாலினியும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
- புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் போலீசில் புகார் செய்தார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலினி (20). இவரும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
காதல் திருமணம்
அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் ஏறி கடந்த 3-ந் தேதி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மாலினியின் தாயார் செல்வராணி நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்து வந்தபோது 2 காரில் வந்த கும்பல் அந்த புதுப் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
2 பேரிடம் விசாரணை
அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, மாலினியை கடத்தி சென்று விட்டதாக கண்ணன் அளித்த புகாரில் விசாரணை நடத்தினோம். அப்போது மாலினியை அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் தற்போது மாலினி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும், தனக்கு திருமணமாகவில்லை என்றும் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.
இதனால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.






