திசையன்விளை அருகே பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1.5 லட்சம் திருட்டு

திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52). இடைச்சி விளையில் இருந்து திசையன்விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார்.
திசையன்விளை அருகே பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1.5 லட்சம் திருட்டு
Published on

நெல்லை:

திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52). இவர் சம்பவத்தன்று திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு புறப்பட்டார்.

இடைச்சி விளையில் இருந்து திசையன் விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதை அறிந்த மெரினா இது தொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com