என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சம்பவத்தன்று இரவில் ரவிக்குமார் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மாதவன், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அக்பர் அலி உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது29). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் டாஸ்மாக் கடை அருகில் சென்ற போது மோட்டர் சைக்கிள் பஞ்சரானது. இதனால் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மாதவன் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர் அலி (19) உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாதவன் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய சேப்பாக் 129 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி 71 ரன்னில் ஆல் அவுட்டானது.

    நெல்லை:

    நெல்லையில் இன்று 25-வது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. சிபி 31, சசிதேவ் 25 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. சேப்பாக் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் திருச்சி அணி சிக்கியது. குறிப்பாக, சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இறுதியில் திருச்சி அணி 71 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெறும் 3வது வெற்றி ஆகும்.

    திருச்சி அணி தான் ஆடிய 6 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்றைய 25-வது லீக் போட்டி 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் திருச்சி- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த மதன் குமார் மற்றும் சந்தோஷ் ஷிவ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    18வது ஓவரில் சிபி மற்றும் சசி தேவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    • கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.
    • 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வி.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

    இந்த போட்டியில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஹரி நிஷாந்த் 33 ரன்களிலும், ஸ்ரீ அபிஷேக் 17 ரன்களிலும், தீபன் லிங்கேஷ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 14 ரன்களிலும், கிரிஷ் ஜெயின் 11 ரன்களிலும், ஸ்வாப்நில் சிங் 10 ரன்களிலும், ஜகதீசன் கவுஷிக் 9 ரன்களிலம், சரவணன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    குர்ஜப்னீத் சிங் 5 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வியை சந்தித்தது.

    இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிழை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.

    அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    • நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    நெல்லை:

    தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், டவுன் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் 4 ரத வீதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    சாலைகளை சுத்தம் செய்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், சாக்கடைகள் அப்புறப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட னர். இது தவிர டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து நயினார் குளம் சாலை வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    மேலும் மவுண்ட் ரோடுகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர்.

    மேலும் ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியை பக்தர்களும், தன்னார்வலர்களும் பாராட்டினர்.

    • தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    தேரோட்டத்தின் போது பக்தர்களிடம் இருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சி.சி.டி.வி காமிராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நெல்லையப்பர் தேரின் முன்பாக போலீஸ் வேனில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த ஆண்டு ஜாதி ரீதியிலான பனியன்கள், ரிப்பன்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் நிறுவனங்கள் ஒரே மாதிரியான பனியன்களை வழங்கினர். அதனை அணிந்து தேருக்கு தடி போடுபவர்கள் தடி போட்டனர். மேலும் தேருக்கு முன்பாக நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கப்பட்டது. மேலும் சிவனடியார்களும் சங்கொலி எழுப்பினர். தேரோட்டத்தை ஒட்டி 4 ரதவீதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வயர்களை அகற்றி தேரோட்டத்திற்கு வழிவகை செய்தனர்

    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஓதுவார் பயிற்சி பள்ளி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேலப் பாளையம் அருகில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.1.99 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை, பணியாளர் அறை, விடுதி புதுப்பித்தல், மேல்நிலை வகுப்பறை புதுப்பித்தல் போன்ற பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த னர். அப்போது உங்களுக்கு தேவையான வசதிகள் தேவைப்பட்டால் உடனடியாக தெரிவியுங்கள்.

    அதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேவை யான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.

    • சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர்.
    • வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடை பெற்றது.

    காலை 8.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கிய நிலையில் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வானம் அதிர கோஷங்களிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

    ஒரு கட்டத்தில் 4 ரத வீதிகளிலும் தார் சாலையை பார்க்க முடியவில்லை. திரும்பி பார்க்கும் இட மெல்லாம் பக்தர்கள் தலைகள் தான் தென்பட்டது. சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர். வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட விழாவில் மிக அதிக அளவில் பங்கேற்றனர். அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக டவுன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சொக்கப்பனை முக்கு வரையிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் வழியாக மவுண்ட் சாலையில் கணேஷ் தியேட்டர் வரையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    • காந்திமதி மருத்துவமனைக்கு நேற்று மொபட்டில் சென்றுள்ளார்.
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட காந்திமதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுண் மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகள் காந்திமதி (வயது 33). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு நேற்று மொபட்டில் சென்றுள்ளார். பின்னர் மருத்துவரை பார்த்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    நிலை தடுமாறி...

    சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் வந்துள்ளார். அப்பகுதியில் நான்கு வழிச்சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை அவர் கவனிக்கவில்லை. இதனால் மொபட் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காந்திமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் நெல்லை கிராமப்புற வினியோக பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கர்பாண்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேது ராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான் குளம், தென்கலம், மதவ குறிச்சி ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு விருந்தினராக இணை பேராசிரியர் முரளி சங்கர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.
    • கருத்தரங்கில் கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாளை அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் கணிணி பயன்பாட்டுத்துறையில் "செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் ரமணி அறிமுக உரையாற்றினர்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவூதிஅரேபியா கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை பேராசிரியர் முரளி சங்கர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு "செயற்கைநுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் மேஜர் சந்திரசேகரன் சிறப்புரைஆற்றினார். கணினி அறிவியல் துறை மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாட்டு அறிவியல் துறை சார்பாக 286 மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

    ×