களக்காடு அருகே மில் ஊழியரிடம் செல்போன் பறித்த கும்பல்

சம்பவத்தன்று இரவில் ரவிக்குமார் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மாதவன், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அக்பர் அலி உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.
களக்காடு அருகே மில் ஊழியரிடம் செல்போன் பறித்த கும்பல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது29). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் டாஸ்மாக் கடை அருகில் சென்ற போது மோட்டர் சைக்கிள் பஞ்சரானது. இதனால் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மாதவன் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர் அலி (19) உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.

அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாதவன் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com