என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடிய விடிய தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் - கமிஷனருக்கு பக்தர்கள் பாராட்டு
- நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
- சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நெல்லை:
தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், டவுன் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் 4 ரத வீதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
சாலைகளை சுத்தம் செய்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், சாக்கடைகள் அப்புறப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட னர். இது தவிர டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து நயினார் குளம் சாலை வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
மேலும் மவுண்ட் ரோடுகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர்.
மேலும் ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியை பக்தர்களும், தன்னார்வலர்களும் பாராட்டினர்.






