search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சுரேஷ் குமார் அதிரடி பேட்டிங்- மதுரை அணிக்கு எதிராக 208 ரன்களை குவித்தது கோவை கிங்ஸ்
    X

    சுரேஷ் குமார் அதிரடி பேட்டிங்- மதுரை அணிக்கு எதிராக 208 ரன்களை குவித்தது கோவை கிங்ஸ்

    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.

    அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    Next Story
    ×