என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாரதா மகளிர் கல்லூரியில் கணிணி பயன்பாட்டுத்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு
- சிறப்பு விருந்தினராக இணை பேராசிரியர் முரளி சங்கர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.
- கருத்தரங்கில் கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளை அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் கணிணி பயன்பாட்டுத்துறையில் "செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் ரமணி அறிமுக உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவூதிஅரேபியா கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை பேராசிரியர் முரளி சங்கர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு "செயற்கைநுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் மேஜர் சந்திரசேகரன் சிறப்புரைஆற்றினார். கணினி அறிவியல் துறை மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாட்டு அறிவியல் துறை சார்பாக 286 மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.






