என் மலர்
உள்ளூர் செய்திகள்

காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் சேகர்பாபு விடுதி மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அருகில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
ரூ.1.99 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்- காந்திமதி அம்பாள் பள்ளியில் சபாநாயகர், அமைச்சர் ஆய்வு
- சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஓதுவார் பயிற்சி பள்ளி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேலப் பாளையம் அருகில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.1.99 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை, பணியாளர் அறை, விடுதி புதுப்பித்தல், மேல்நிலை வகுப்பறை புதுப்பித்தல் போன்ற பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு விடுதியில் உள்ள மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த னர். அப்போது உங்களுக்கு தேவையான வசதிகள் தேவைப்பட்டால் உடனடியாக தெரிவியுங்கள்.
அதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேவை யான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.






