என் மலர்
திருநெல்வேலி
- மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடை களில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன் படுத்துவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நெகிழி இல்லா நெல்லை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மாநகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட 4 மண்டலங்க ளிலும் மாநகராட்சி சுகாதா ரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்த லின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப் பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் 18-ந்தேதி வரை சுமார் 3 மாத காலங்களில் இந்த மண்டலத்தில் மட்டும் கடைகளில் இருந்து சுமார் 2 டன் வரையிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபராத தொகை யாக வசூலிக்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் மற்றும் 3 மண்டலங்களிலும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பிளாஸ்டிக் பைகளுக்கான அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- காற்றின் வேகத்தால் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
- தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் சுமார் 110 டன் குப்பைக் கழிவுகள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.
தீ விபத்து
அவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்து விடும். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம்
இதற்கிடையே இந்த பயங்கர தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர்.
நேற்று 2-வது நாளாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
சாலைமறியல்
இந்நிலையில், தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி ராமை யன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாக வும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மறியலில் ஈடுபட்ட வர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
3-வது நாளாக தீ அணைக்கும் பணி
இதற்கிடையே தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், ஒரு சில பகுதிகளில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.
சில இடங்களில் புகை மூட்டம் தொடர்ந்து காணப்படு வதால் பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். எனவே குப்பை கிடங்கில் தீயை முழுமையாக அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக புகை வரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளி வந்து கொட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.
- வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது.
- இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. டி.எஸ்.பி. யோகேஷ் குமார் மற்றும் ஆர்.டி.ஓ. பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலையில் செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பள்ளியின் தாளாளர் துரைச்சாமி, தலைமை ஆசிரியை அனு மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் மகாராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
- அறைகளில் இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.
நெல்லை:
பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள மாறன்குளம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் செல்லப்பா. இவரது மகள் பாப்பா(வயது 36). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். பீரோவில் பணம் இருக்கிறதா என்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்குள்ள அறைகளில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களை திருடிச்சென்றார்.
இதுகுறித்து பாப்பா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- துரை மூலைக்கரைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் துரை படுகாயம் அடைந்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள காரங்காடு, பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரை (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி மூலைக்கரைப்பட்டிக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தென்னிமலை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக விறகு லோடு ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் துரை படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி இசக்கிலதா (43) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கில் இருந்து சுப.உதயகுமார் உள்பட 3 பேரை வள்ளியூர் நீதிமன்றம் விடுவித்தது.
- இந்த வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை:
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் 295 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து சுப.உதயகுமார் புஷ்பராயன், சேசுராஜன் உள்ளிட்ட 3 பேரை வள்ளியூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
- உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
- சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கம் கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா, கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணினி பயன்பாட்டுத் துறை இயக்குனர் மற்றும் உதவிபேராசிரியை பார்வதிதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லைவ் வயர் கார்ப்பரேட் நிறுவன டெக் லீட் அணு பிரியன் கலந்து கொண்டு 'புல் ஸ்டேக்கை பயன்படுத்தி க்ரட் ஆபரேஷன் மெர்ன்' என்ற தலைப்பில் செயல்முறை பயிலரங்கத்தை நடத்தினார். நிகழ்ச்சியில் நெல்லை லைவ்வைர் தொழில்நுட்பத் தலைவர் வரதராஜன், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவிபேராசிரியை சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.
- தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்ய பணம் தருவதாக கூறியுள்ளார்
- நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜோசப் ராஜ ஜெகன். வக்கீல். இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது அலுவல கத்திற்கு வந்து கதவை திறந்த போது அங்கு அருகில் நின்றி ருந்த மர்ம நபர் அவரை தலையில் வெட்டினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரையும், அவரது கூட்டாளி ஒருவ ரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
கூலிப்படையினர்
போலீசார் நடத்திய விசாரணையில் வக்கீல் ஜெகனை வெட்டிக் கொல் வதற்காக வந்தவர்கள் கூலிப்படையினர் என்றும், சம்பவ இடத்திற்கு 3 பேர் வந்ததாகவும் ஒருவர் தப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீ சார் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்வதற்காக மூன்றடைப்பை அடுத்த பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தாங்கள் வக்கீலை கொல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
இந்நிலையில் வக்கீல் ஜெகன் கூலிப்படை யினரால் கொடூரமாக தாக்கப் பட்டதை கண்டி த்தும், சம்பந்தப் பட்ட வர்களை உடனே கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற பணி களை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விக்னேஷ் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது.
நெல்லை:
நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19).இவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் டவுனில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். சீதபற்ப நல்லூரை அடுத்த வெள்ளாளங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
- மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா குழந்தைகள் வளர்ப்பு பற்றி எடுத்துக் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் பாளையை அடுத்த கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா கலந்துகொண்டு குழந்தைகள் வளர்ப்பு பற்றி புதுமண தம்பதிகளிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பாளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, வட்டார சுகாதார ஆய்வாளர் முத்துசாமி, அங்கன்வாடி சீதாலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரியம்மாள், பணி தள பொறுப்பாளர் சோபனா, வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
- காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.
- பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் காயத்துடன் உயிர் தப்பினார்.
நெல்லை:
நெல்லை டவுன்-பேட்டை சாலையில் கோடீஸ்வரன் நகர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முதல் பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கொம்புமாடசாமி கோவில் வரை சாலையின் ஓரத்தில் பழமையான மரங்கள் உள்ளது.
இதில் பெரும்பாலான மரங்களின் கிளைகள் சாலையை நோக்கி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து சற்று ஆபத்தாகவே அமைந்துள்ளது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசும் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து விடுகிறது.
இதனால் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யூப் நெல்லை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இப்போது தென்மேற்கு பருவமழை காலத்தை ஒட்டி சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து விடுகின்றன. மரத்திலிருந்து கிளைகள் ஒடிந்து விழுகின்ற நேரத்தில் வாகனத்தின் மீது விழுந்தால், வாகன ஓட்டிகள் பேராபத்தை சந்திக்க நேரிடும்.பெரிய வாகனத்தில் விழுந்தால் வாகனம் நிலை தடு மாறி எதிரே வரக்கூடிய வாக னத்தில் மோதி விடும் நிலை இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது மரக்கிளை ஒடிந்து அவர் மீது விழுந்து காயத்துடன் உயிர் தப்பினார். எனவே அலட்சி யம் கா ட்டாமல் பங்க்கிலிருந்து கொம்பு மாடசாமி கோவில் வரையுள்ள மரக் கிளைகளை வெட்டி வாகன ஓட்டி களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தலையணையை எடுத்து கோமதி முகத்தில் வைத்து அமுக்கினார்.
- மூதாட்டிக்கு கைதான வாலிபர் அவ்வப்போது சென்று மருந்து- மாத்திரைகள் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கோமதி (வயது 82). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ராமசாமி தனது மகனுடன் உயிரிழந்தார்.
25 பவுன் நகை கொள்ளை
இதனால் கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர். கடந்த 17-ந்தேதி இரவில் கோமதி வீட்டில் இருந்தார்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென்று வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு, அங்கிருந்த தலை யணையை எடுத்து கோமதி முகத்தில் வைத்து அமுக்கினார். மேலும், அவர் வைத்திருந்த நகைகளை தரும்படி மிரட்டினார்.
திடீரென கோமதியை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 25 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துவிட்டு வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வாலிபர் ஒருவர் மட்டும் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் மூதாட்டியிடம் நகையை திருடிய நபர், டவுனில் மூதாட்டி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டிக்கு கைதான வாலிபர் அவ்வப்போது சென்று மருந்து- மாத்திரைகள் வாங்கி கொடுத்து வந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் நகைகளை திருடி அதன்மூலம் கடனை அடைக்க வாலிபர் திட்டமிட்டுள்ளார். இதற்காக மூதாட்டிக்கு தெரியாமல் அவரது பீரோ சாவியை எடுத்து கள்ளச்சாவி தயாரித்து உள்ளார். அதனை கொண்டு சம்பவத்தன்று நகைகளை கொள்ளையடித்தார். அப்போது மூதாட்டி அதனை பார்த்தததால் தலையணையை கொண்டு அவரது முகத்தை அமுக்கி தாக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






