search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடங்குளம் வழக்கு - 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது வள்ளியூர் நீதிமன்றம்
    X

    கூடங்குளம் வழக்கு - 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது வள்ளியூர் நீதிமன்றம்

    • வழக்கில் இருந்து சுப.உதயகுமார் உள்பட 3 பேரை வள்ளியூர் நீதிமன்றம் விடுவித்தது.
    • இந்த வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் 295 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்டன.

    இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து சுப.உதயகுமார் புஷ்பராயன், சேசுராஜன் உள்ளிட்ட 3 பேரை வள்ளியூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

    Next Story
    ×