என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • முசிறியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொணடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    முசிறி,

    முசிறி கைகாட்டியில் மருத்துவமனை கட்டிட பணியை ஆய்வு செய்ய கோரி தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சுரேஷ், தொகுதி தலைவர் பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் லிங்கம் , மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில துணை பொருளாளர் ரேணு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட பொறுப்பாளர் சேருகுடி சங்கர், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முசிறி ஒன்றிய தலைவர் ஜெயபால் உட்பட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொணடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • திருச்சி கூட்டுறவுத்துறை சார்பில்விழிப்புணர்வு கருத்தரங்கம்
    • சட்டம்-2005 விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருச்சி, 

    திருச்சி கூட்டுறவுத்துறை சார்பில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலமாக நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு திருச்சி சரக துணை பதிவாளர் சாய் நந்தினி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கென்னடி மாணவ மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர், பணியாளர் அலுவலர் முத்தமிழ் செல்வி, திருச்சி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அதிகாரி பேபி ராணி, மண்டல துணைப் பதிவாளர் வீட்டு வசதி நாராயணமூர்த்தி, துணைப் பதிவாளர் பயிற்சி காவியா நல்ல மணி, திருச்சி கூட்டுறவு ஒன்றியத்தின் செயல் ஆட்சியர் ஹபிபுல்லா மற்றும் கூட்டுறவு மேலாண்மை பற்றிய பேச்சு நிலையத்தின் முதல்வர் கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர்

    • திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில்மாநில அளவிலான வினாடி வினா போட்டி
    • 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்சி,  

    திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி, திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய சொல்லுங்கள் வெல்லுங்கள் என்ற வினாடி வினா போட்டி இன்று திருச்சி என். ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ராஜா கோவிந்தசாமி, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024-25 ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் கே. ஸ்ரீனிவாசன்,சங்கச் செயலாளர் அப்துல்லா, துளசி பாலசுப்பிரமணியன்,ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செந்தில்நாதன், செல்வகுமார், ராஜேஷ், லோகநாதன் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்தபோட்டியில் திருச்சி மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் இருந்து 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் 3-ம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், 4-ம் பரிசாக 5 ஆயிரமும், 5-ம் பரிசு ரூ.2 ஆயிரத்து ஐநூறு ,6-ம் பரிசாக ரூ. ஆயிரத்து ஐநூறு மற்றும் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    • ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்து தாய்,மகன் சாவு
    • தந்தை உயிருக்கு போராட்டம்

    திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருக்கு சிவகாமி (60) என்ற மனைவியும் செந்தில், தினேஷ் (வயது36) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    மூத்த மகன் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இருந்த போதிலும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகன் ஆகியோர் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

    நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகன்தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் சிவகாமி பரிதாபமாக இறந்தார்.ஆபத்தான நிலையில் மோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கத்தில் தாய்,மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.

    • அரியமங்கலத்தில்கோவிலில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருடிய முதியவர்
    • திருடப்பட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

    திருச்சி

    திருச்சி அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் உள்ளது. இரவு அர்ச்சகர் மணிகண்டன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்ம ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் இருந்த பித்தளை அகல் விளக்கு மற்றும் பித்தளை மணியை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அர்ச்சகர் மணிகண்டன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி லால்குடி அருகே உள்ள பரமசிவபுரத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 72)என்ற முதியவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரவு ஒரு விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்கிறது.
    • ராதிகாவை மீட்க மேலும் சில தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

    திருச்சி:

    இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர்.

    இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில் சிக்கி உள்ளனர்.

    திருச்சி பேராசிரியை சிறப்பு பயிற்சி பெறுவதற்காக சென்றிருந்த நிலையில் அங்கு சிக்கி உள்ளார்.

    திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சொட்டுநீர் பாசனம் குறித்த 3 வார பயிற்சிக்காக கடந்த செப்டம்பர் 23ம் தேதி காசாவிற்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இவர் சென்ற சில நாட்களிலேயே போர் தொடங்கி விட்டது. இதனால் அங்குள்ள பதுங்கு குழி அமைப்பில் ராதிகா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இவர் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

    இதற்கிடையே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ராதிகாவை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.

    மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரவு ஒரு விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்கிறது. இதில் இன்று 230 பேர் மீட்டு வரப்படுகிறார்கள்.

    இதில் ராதிகா இடம் பெற வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் தலைநகரில் சிக்கி உள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் மீட்கப்பட இருக்கிறார்கள்.

    இவர் இஸ்ரேல் தலைநகரில் இருந்து வெகுதூரத்தில் காசா அருகாமையில் இருக்கிறார். அங்கிருந்து இஸ்ரேல் தலைநகருக்கு அழைத்து வந்து அதன் பின்னரே இந்தியாவுக்கு மீட்டு வர வாய்ப்புள்ளது. ஆகவே ராதிகாவை மீட்க மேலும் சில தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

    பாதுகாப்பாக இருக்கும் பேராசிரியை ராதிகா விரைவில் மீட்கப்படுவார் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
    • பச்சை கிளிகளை விற்பதும் வாங்குவதும் ஜாமினில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

    திருச்சி:

    திருச்சியில் பிரதான கடைவீதிகள் மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது .இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாக சோதனை செய்தார்கள். இதில் தனிஷ் சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக பச்சைக்கிளிகள் 108, மற்றும் 30 முனியாஸ் பறவைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கூண்டு கம்பி-5, வலைகள்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்த கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவரது வீட்டை சோதனை செய்து அவரிடமிருந்து 8 முனியாஸ் பறவைகள், வேட்டைக்கு பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் வலை பறிமுதல் செய்தனர்

    பின்னர் 5 பேரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2 ஆஜர்படுத்தி 15 நாள் அடைப்பு காவல் உத்தரவு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த அதிரடி சோதனையில் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், வன சரக அலுவலர்கள் கோபிநாத், தினேஷ், உசேன் வனவர்கள் பாலசுப்ரமணியன், துளசி மலை, சரண்யா, கஸ்தூரி பாய், வனக்காப்பாளர்கள் சரவணன், அரவிந்த், கருப்பையா, ஜீவானந்தம், சுமதி, நஸ்ருதீன் வன காவலர் சுகன்யா இடம் பெற்றிருந்தனர்.

    மாவட்ட வன அலுவலர் கூறுகையில், பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சை கிளிகளை விற்பதும் வாங்குவதும் ஜாமினில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இதுகுறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச்சரக அலுவலர் தொடர்பு கொள்ளவும். தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    மண்ணச்சநல்லூர்:

    காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று டெல்டா மாவட்டங்களை கடைகளை அடைத்து மறியல் போராட்டம் நடந்தது.

    திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    தமிழகத்திற்கு குறுவைக்கும், சம்பா சாகுபடிக்கும் கர்நாடகாவிடமிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத் தராத பா.ஜ.க. அரசை கண்டித்தும், அணையில் தண்ணீர் இல்லை என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் கபட நாடகமாடும் கர்நாடக முதல்-மந்திரி சீத்தாராமையாவை கண்டித்தும், தமிழகத்திற்கு உண்டா காவிரி நீரை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியும், காவிரி மேலாண்மை ஆணையை காவிரி நீர் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • ரூ.17.50 லட்சம் மோசடியில் இருந்து தப்பிக்க பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவதாக புகார்
    • பணத்தை இழந்த கரூர் வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் புகார்

    திருச்சி,

    கரூர் சரவணா நகர் நத்தமேடு சோழியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்(வயது 57) இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-நானும் சில பங்குதாரர்களும் சேர்ந்து கரூரில் பழைய பேப்பர் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி அவரது உறவினர் மூலமாக எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு திருச்சியில் பழைய பேப்பர் வாங்கி விற்கும் தொழிலை நடத்தலாம் என கூறினார்கள்.

    பின்னர் எனது பங்காக ரூ. 5 லட்சம் ரொக்கமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அவர் தனது மகள் கணவர் மற்றும் இன்னொருவருடன் கரூர் வந்தார். வாங்கிய பணத்தை திரும்ப தந்து விடுகிறோம்.

    இப்போது மருமகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை காப்பாற்ற பணம் வேண்டும் என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து நான் கம்பெனி பணம்ரூ.12 லட்சம் 50 ஆயிரம் தொகையை சிறிது சிறிதாக கொடுத்தேன். ஆனால் பணத்தை திரும்பத் தரவில்லை.அதைத்தொடர்ந்து நான் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி அவர்கள் மீது உறையூர் போலீசில் புகார் செய்தேன். இந்த நிலையில் தற்போது அந்த அந்த பெண்மணியின் மகளை கர்ப்பமாக்கி கருவை கலைத்ததாக ஒரு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தப் பெண்ணை நான் தனியாக சந்திக்கவில்லை. எனது கம்பெனி பணம் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பத் தராமல் என் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்துள்ள 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • ஸ்ரீரங்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மனைவி, மகனுடன் விவசாயி விஷம் குடித்தார்
    • ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலாளி. இவர் தீராத நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.மயங்கி கிடந்த அவர்களை அக்க்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து உதவி கமிஷனர் நிவேதா லஷ்மி விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி ஜங்ஷனில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் சிக்கினார்
    • மேலும் கேட்பாரற்று கிடந்த பையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

    திருச்சி,

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 2-வது நடை மேடை சுரங்க பாதையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது 4 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 80 ஆயிரம். பின்னர் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.மேலும் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில்14 கிலோ எடையுள்ள 4 மூட்டை கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை கடத்தி வந்த நபர் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இந்த கஞ்சா பொட்டலங்கள் கவுரா எக்ஸ்பிரஸ் மூலம் ஒடிசா திருச்சிக்கு கடத்தி பெறப்பட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மனைவி, ௨வது கணவருக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது
    • கருத்து வேறுபாட்டினால் பிரிந்த முதல் கணவர் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது கனி (வயது 49), மீன் வியாபாரி. இவரது மனைவி சர்மிளா பானு ( 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த 4 வருட காலமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    முகமது கனி செங்கிப்பட்டியில் வசித்து வருகிறார். ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்துவருகிறார்.

    இந்த நிலையில் முகமது கனி தனது முதல் மனைவி ஷர்மிளா பானுவை பார்க்க போதையில் சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா பானு தனது 2+வது ஜான் பாஷாவுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமது கனி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவையும் கத்தியால் குத்தினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    முகமது கனிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட 3 பேரையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×