என் மலர்
திருச்சிராப்பள்ளி
- மது குடிப்பதை கண்டித்தார்
- கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
திருச்சி
முசிறி புலிவலம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). தொழிலாளியான இவரது மோட்டார் சைக்கிளை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றார்.
பின்னர் 10 நாட்களுக்கு மேலாகியும் மோட்டார் சைக்கிளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் வேலைக்கு செல்லாமல் இருந்த பெரியசாமி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் மன அழுத்தத்துக்கு ஆளான பெரியசாமி திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி சங்கீதா புலிவலம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வாகன சோதனை செய்தனர்.
- ரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
திருச்சி,அக்.15-
திருச்சியை அடுத்த மணிகண்டம் பகுதியில் அளுந்தூர் மாரியம்மன் கோவில் அருகில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது சிவகாசியில் இருந்து 3 லாரிகள் வந்தது.அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள். சோதனையில் 3 லாரிகளின் உள்ளே பார்த்த போது, அதில் எளிதில் தீப்பற்ற கூடிய வெடிப்பொருட்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீசார் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லாரி மற்றும் அதிலிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட லாரிகளில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பண்டல் பண்டலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள கஞ்சா
- பிரபல கஞ்சா வியாபாரி கைது
திருச்சி
மணிகண்டம் கள்ளிக்குடி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் யுவராஜா ஆகியோர் ரோந்து சென்று பார்த்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வருவதை பார்த்து தான் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை சாக்கு பையில் ஏதோ கட்டிவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.
உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அந்த வெள்ளை பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை எடுத்து போலீசார் எடை போட்டு பாத்த போது சுமார் 28.500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு பிடிபட்ட மர்ம ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாளன்நகரை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 50) என்பது தெரியவந்தது.
பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 46 கஞ்சா வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் நைனா முகமதை கைது செய்தனர்.
பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ5,750 பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில்
- நவராத்திரி விழா தொடக்கம்
திருச்சி
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நவராத்திரி விழா இன்று 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று மாலை அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் 2ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
2, 3ம்நாட்களில் அம்மன் ஏகாந்த காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 4ம்நாளான 18-ந்தேதி ராஜஅலங்காரத்திலும், 19-ந்தேதி தாம்பூலம் தரித்தல் அலங்காரத்திலும், 20-ந்தேதி ஜெபம் வழிபாடு அலங்காரத்திலும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 22-ந்தேதி சிவலிங்கம் வழிபாடு அலங்காரத்திலும், 23-ந்தேதி மகிஷாசூரன் வதை அலங்காரத்திலும், 24-ந் தேதி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் அம்மன் எழுந்தருளி 4ம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இவ்விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
- ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்
திருச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தாயார் திருவடி சேவை 21-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ் தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.
2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8ம் திருநாளான 22-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ் தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 21–ந்தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
- மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.
இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின் இணைப்பை துண்டிக்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யுமாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவிட்டதாகவும், மின்சாரம் உள்ள பகுதிகளில் அவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங்மேன்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது மணிமேகலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.
இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
- மணப்பாறை அருகே சம்பவம்
- பெண்ணுக்கு பாலியல் தொல்லை;
- விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்.இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பி னராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.
அப்போது மணிமே கலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடு த்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.
இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணி மேலையை தகாத வார்த்தை களால் திட்டியதோடு சம்ப வத்தை வெளியில் சொ ன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் பாதி க்கப்பட்ட மணிமே கலை, பாண்டி யன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில உயர்நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறை யினருக்கு உத்தரவி ட்டதை அடுத்து மணப்பாறை அனை த்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெ க்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
- திருச்சி வையம்பட்டியில் நடுரோட்டில் சம்பவம்
- தொழிலாளியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வாலிபர்
- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
திருச்சி,
திருச்சி வையம்பட்டி தொப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வையம்பட்டியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் ராஜேந்தி ரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்செ ல்வனுக்கும் அவரது சகோதரர் லோகநாத னுக்கும் இடையே நிலத்த கராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. தமிழ்செ ல்வனுக்கு ஆதரவாக அவரது கடையில் வேலை பார்க்கும் ராஜே ந்திரனும், லோகநாதனுக்கு ஆதரவாக ஷாஜகானும் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் வையம்பட்டி பகுதியில் வைத்து ராஜேந்திரனுக்கும் ஷாஜகானுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்ப ட்டது. பின்னர் அது கைகல ப்பாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த ஷாஜ கான், ராஜேந்திரனை அடித்து உதைத்து தாக்கி னார்.
இதனை தமிழ்செல்வன் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இது தற்போது வையம்பட்டி பகுதியில் வைரல் ஆகியு ள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஷாஜகான் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து கேங்மேன் காயம்
- திருச்சி உதவி மின் பொறியாளர் சஸ்பெண்டு
திருச்சி
திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவ லகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.
இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின் இணைப்பை துண்டி க்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யு மாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தர விட்டதா கவும், மின்சாரம் உள்ள பகுதி களில் அவர்க ளை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொ டர்ந்து பாதிக்க ப்பட்ட வருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடந்தது.மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறி யாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங் மேன்கள் தரப்பில் நடத்த பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்க ப்பட்டது. இதைத் தொட ர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவ ணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார்.
- வேன் உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
- பிரபல ரவுடி கைது
- திருச்சி அரியமங்கலத்தில் சம்பவம்
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்தவர் தெய்வ மணிகண்டன் (வயது 41). இவர் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர், அவரது சட்டை பையில் இருந்த 2500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து தெய்வ மணிகண்டன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற, கஞ்சா கணேசன் என்ற ரவுடியை கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிந்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கஞ்சா கணேசன் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி ,செயின் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மாஹாளய அமாவாசை
- திருச்சி காவிரி படித்துறைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்
திருச்சி.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளும், தான தர்மங்களும் நம் முன்னோர்களை மோட்சத்தை அடைய செய்யும் என்பது நம்பிக்கை. அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து, அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை தானமாக வழங்கினர்.
இதேபோல் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கருட மண்டபம், கீதாபுரம் படித்துறை, திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து தர்ப்பணம் கொடுத்தவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை தந்ததால், அம்மா மண்டபம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்து திருவனைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் செல்கின்றன.






