என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது குடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
- மது குடிப்பதை கண்டித்தார்
- கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
திருச்சி
முசிறி புலிவலம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). தொழிலாளியான இவரது மோட்டார் சைக்கிளை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றார்.
பின்னர் 10 நாட்களுக்கு மேலாகியும் மோட்டார் சைக்கிளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் வேலைக்கு செல்லாமல் இருந்த பெரியசாமி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் மன அழுத்தத்துக்கு ஆளான பெரியசாமி திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி சங்கீதா புலிவலம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






