என் மலர்tooltip icon

    தென்காசி

    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷப்பர்ட் பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டது.

    பின்னர் தெரு தெருவாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராமலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி பரமசிவன், மொன்னா முகம்மது இர்சாத், முகைதீன் அப்துல் காதர், பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் இனிப்புகளை வழங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், தலைமை கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை சேர்மன் வள்ளி முருகன் வழங்கினார்.விழாவில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் காவலர்கள் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தெருவிற்குள் வரக்கூடாது என்று கூறி பாண்டி என்ற பாண்டியராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலை காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது34) என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்நிலை காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் விசாரணை நடத்தி பாண்டி என்ற பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • விஜயதசமியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வன்னிகோேனந்தல் கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்

    தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.கற்றல் திறனை அதிகரிக்க அதிகமான புத்தகங்களை படிக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், முருகராஜ், தமிழ் சேவா சங்கம் காளிராஜ், ஏகலைவன் வித்யாலயா பள்ளி, பண்டாரம், ஏகலைவன் ஒன்றிய தலைவர் அந்தோணி சாமி, வன்னிகோனந்தல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி முத்துராமன், அருள், ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. கொடி கம்பம் அமைக்க கட்டப்பட்ட காங்கிரீட் அடிப்பகுதியை ஜே.சி.பி. மூலம் அகற்ற மாட்டோம் எனவும் போலீசார் கூறினர்.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரம் கிராமத்தில் நுழைவுப் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாதாரண கம்புடன் கூடிய கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது.

    அதன் அருகிலேயே மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்களும் நிறுவப்பட்டிருந்ததால் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள், தங்களின் கொடி கம்பத்திற்காக ஏற்கனவே கொடி கம்பம் இருந்த இடத்தில் தாமரை வடிவில் படம் வரைந்த அடிப்பகுதி சிமெண்ட் மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்ட திண்டின் மீது இரும்பு குழாயால் கொடிக்கம்பத்தை புதுப்பித்து 2 நாட்களுக்கு முன்பாக கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திடீரென கடையம் போலீசார் நேற்று இரவு எவ்விதமுன் அறிவிப்பும் இன்றி அந்தப் பகுதியின் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வின் கொடிக்கம்பத்தை மட்டும் அகற்றி உள்ளனர் .

    இதனால் அந்தப் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது. மேலும் போலீசாருக்கு எதிராக தரையில் அமர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

    தி.மு.க., அ.தி.மு.க. என மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருந்ததை அகற்றாமல் தங்களின் கட்சி கொடியை மட்டும் அதுவும் விடுமுறை நாளில் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் எவ்வித முன் அறிவிப்புகளும் இன்றி போலீசார் அகற்றியதால் தாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக பா.ஜ.க.வினர் கூறினர்.

    சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் தான் கொடி கம்பம் அகற்றப்பட்டதாகவும், மற்ற கொடிக்கம்பங்களும் அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டதா? என ஆய்வு செய்து அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

    மேலும் பா.ஜ.க. கொடி கம்பம் அமைக்க கட்டப்பட்ட காங்கிரீட் அடிப்பகுதியை ஜே.சி.பி. மூலம் அகற்ற மாட்டோம் எனவும் போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் இரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பரபரப்பு நிலவியது.

    • ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், சுகிர்தா , ஊராட்சி செயலர் மூக்காண்டி, மற்றும் மாரித்துரை , முப்புடாதி, அழகையா, முருகையா, சுப்பிரமணியன், கணபதி, சீவலமுத்து, குடிநீர் இயக்குபவர் குமார், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.
    • மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ' என்னும் எழுத்தை எழுதினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' என்னும் எழுத்தை எழுதினர். மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாடப்புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

    • வில்சன் சாலமன் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணம் கிராமத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக இருந்து வருபவர் வில்சன் சாலமன் (வயது 58).

    கார் மோதி விபத்து

    இவர் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக பாவூர்சத்திரம் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    12 மோட்டார்கள் சேதம்

    இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேத மடைந்தன. வில்சன் சாலமன் ஒட்டி வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி வில்சன் சாலமன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
    • இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கிப்ட்சன் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

    அதனை கேட்டுக் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தகவல் தொழில் நுட்ப அணி செயல்பாட்டிற்கு வடக்கு மாவட்ட கழகம் என்றும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சிவாஜி, ரெஜிகலா, வாசு தேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர்கள் சுவாமி நாதன், ரஜினி காந்த், சங்கரேஸ்வரி, சங்கரன் கோவில் சட்ட மன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்பாண்டியன், வீமராஜ், சங்கரேஸ்வரி, நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கணேஷ், சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
    • 10-வது நாளான விஜயதசமி அன்று “அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா” நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த வருட நவராத்திரி விழா 15-ந் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு படிகளில் கொலுமேடை உருவாக்கப்பட்டது.

    நவராத்திரி பூஜையை மேலும் அழகாக்கும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸீ, சன் பிளவர் எனும் நான்கு அணி மாணவர்களும், இந்தியாவின் நான்கு திசைகளின் முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டு வகைகளை தனித்தனியே அவற்றின் தனித்தன்மை விளக்கும் விதமாக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். மார்னிங் குளோரி அணி மேற்கு இந்திய மாநிலங்களையும், சன் பிளவர் அணி தென்னிந்திய மாநிலங்களையும், லோட்டஸ் அணி வட இந்திய மாநிலங்களையும், ரைசிங் டைஸி அணி கிழக்கு இந்திய மாநிலங்களையும், மையமாக வைத்து அவற்றின் பாராம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் தோன்றிய விதம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதோடு அவற்றை அணி மாண வர்களே மாணவர்களுக்கும் கொலுவை காண வந்தவர்களுக்கும் விளக்கிக் காட்டினர்.

    மேலும் ஆசிரியைகளும், கொலுவினை தினமும் வித்தியாசமாகக் காட்டும் விதத்தில் அவற்றினை அலங்காரப்படுத்தியதும், அந்தந்த நாளுக்குரிய கோலங்கள், மலர்கள், பிரசாதங்களை அவர்களே தயார்செய்து வந்து அன்றாட பூஜையை அந்நாட்களுக்குரிய வண்ண உடை உடுத்தி, மாண வர்களோடு இணைந்து வழிபாடு செய்தனர்.

    9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.10-வது நாளான விஜயதசமி அன்று "அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா" நடைபெற்றது. அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உடன் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்.

    • முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
    • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    ×