தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் சாலை யில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கிப்ட்சன் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கள பணி செய்ய தங்களது கருத்துக்கள் குறித்து பேசினர்.

அதனை கேட்டுக் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தகவல் தொழில் நுட்ப அணி செயல்பாட்டிற்கு வடக்கு மாவட்ட கழகம் என்றும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சிவாஜி, ரெஜிகலா, வாசு தேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர்கள் சுவாமி நாதன், ரஜினி காந்த், சங்கரேஸ்வரி, சங்கரன் கோவில் சட்ட மன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்பாண்டியன், வீமராஜ், சங்கரேஸ்வரி, நகர தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கணேஷ், சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com