என் மலர்tooltip icon

    தென்காசி

    • பள்ளி மைதானத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.
    • பள்ளி கதவு காலை 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி நூற்றாண்டு கடந்த பாரம்பரிய மிக்க பள்ளி ஆகும்.

    இந்த பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தில் பணிக்கு சேர பயிற்சி செய்பவர்கள் இந்த மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இங்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தேர்வுகளில் பங்கேற்றவர்கள் ஏராள மானவர்கள் காவல்துறை மற்றும் ராணு வத்தில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மைதானத்தில் இரவு நேரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பள்ளி நிர்வாகம் பள்ளி மைதானத்திற்குள் வெளியாட்கள் நுழைய அனுமதி மறுத்து பள்ளி கதவு மூடப்பட்டது. காலை நேரத்திலும் கதவு பூட்டப்பட்டு 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காலை நேரத்தில் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ளும் வயதான வர்கள், இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் வேதனை அடைந்தனர். மேலும் சாலை பகுதிகளில் நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொண்டால் விபத்து அபாயம் உள்ளதால் பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

    மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது மாலை 5 மணிக்கு மேல் மூடப்படுவதில் எந்தவித ஆட்சேபனை யாருக்கும் கிடையாது. ஆனால் அதி காலை நேரத்தில் இத்தனை ஆண்டு காலமாக நடை பயிற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் இரவு நேரங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்க ளை தடுத்து பல ஆண்டு களாக பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி வந்த இந்த மைதானத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக உள்ளனர்.

    சுரண்டை:

    சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

    புதிய வகுப்பறை

    மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய குழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பி ரமணியத்துரை வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மரக்கன்று நட்டு பேசினார்.அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று இஸ்ரோ மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், உயரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த மனிதநேயமிக்க மாண வர்களை உருவாக்கி யதும் இதே அரசு பள்ளி தான். முதல்-அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைத்து பள்ளி சிறப்பாக செயல்படும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாதேவி, உறுப்பி னர்கள் காசிநாதன், பாக்கிய ராஜ் ,சரஸ்வதி, ஹரிஹரன் ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சேர்ந்தமரம் கிளை தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதி வேச முருகேசன், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு,பிரேம் குமார் உட்பட பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியை மதுமதிவதனா நன்றி கூறினார்.

    • மாரிச்செல்வம் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் மாரிச்செல்வம் கிடந்துள்ளார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் - தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் மீது சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தற்கொலை

    இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார். நேற்று காலைஅவரது பெற்றோர் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாரிச்செல்வம் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து சிவகிரி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை

    மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து மன உளைச்சல் காரணமாக மாரிச்செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகாத்தாளை போலீசார் விசாரித்தனர்.
    • லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகாத்தாளை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள இலத்தூர் மந்தை தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி முருகாத்தாள் (வயது 52). இவர் சம்பவ த்தன்று தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் முருகாத்தாளை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணம், 48 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

    சுரண்டை:

    தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்றது. இதில் ராஜேந்திரா விஸ்டம் நர்சரி பிரைமரி, மகரிஷி வேல்ஸ் பப்ளிக், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்,பாரத் வித்யா மந்திர், பாரத் மாண்டிசோரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக், உள்ளிட்ட 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட ராஜேந்திரன் விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளி மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார். இதே பள்ளியை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி ஒப்பித்தல் போட்டியில் 4-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ் ராம்,பள்ளி செயலாளர் சிவ டிப்ஜினிஸ் ராம் ,முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

    • குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.
    • கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக் கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கிணறுகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணை தலைவர் வேலுச்சாமி, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கிணற்றில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    இதில் கிளை செயலாளர் சுகுமாரன், பாலசுப்பி ரமணியன், மின் வாரிய உதவிசெயற்பொறியாளர் ரவி ராமதாஸ், உதவி பொறியாளர் முருகேசன், தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் தங்கப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சாலை ஆய்வாளர் துரைராஜ், மக்கள் நல பணியாளர் சண்முகவேல், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகி பூசைப்பாண்டியன், ஸ்டாலின், சின்னப்பாண்டியன், பெரியசாமி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • பல்லாரியின் விலை ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள னர்.

    மேலும் பல்லாரி விளைச்சலானது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 15 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், அண்டை மாநிலமான கர்நாடகா விலும் 40 சதவீத விளைச்சல் இருந்ததால் அனைத்து விவசாயிகளும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சந்தையில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் பல்லாரியின் விலையும் ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோன்று மாங்காயின் விளைச்சல் மற்றும் வரத்து குறைவின் காரணமாக ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.78 ஆக உயர்ந்துள்ளது.

    வாழை இலை கட்டுகளின் விலையும் ரூ.400 லிருந்து 750 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமானது தொடர்ந்து இன்னும் ஒரு வாரம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.
    • 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நேற்று நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்று பேசினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புகடன், அடமான கடன் மற்றும் சிறுவணிக கடன் உட்பட ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 52 பயனாளி களுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கி னார்.

    தொடர்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதா வது:-

    தென்காசி மாவட்டத்தில், 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 4 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் 2 வேளாண் விற்பனைச் சங்கங்கள் மற்றும் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகை யான கடன்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    விவசாயிகள், நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கால்நடை பராமரிப்புக் கடனாக 4,686 நபர்பகளுக்கு ரூ.30 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், தென்காசி மாவட்டத்தில் இதர வகை கடன்களாக நடப்பு நிதி யாண்டில் 89 மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.3,248 லட்சமும், 102 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27,48 கோடியும் வழங்கப் பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீடு அடமான கடனாக 43 நபர்க ளுக்கு ரூ.2150 லட்சமும் வழங்கப்பட்டு ள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் தொடங்கப் பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையங்கள் மூலமாக கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மின்னணு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டில் இதுவரை 45,818 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கூட்டுற வுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியா ளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் சங்கத்திற்கு வருகை தரும் சங்க உறுப்பி னர்கள் மற்றம் வாடிக்கையா ளர்களின் நம்பிக்கையினை யும், பாராட்டினையும் பெறு கின்ற வகையில் உங்களின் பணிகள் சிறப்புடன் அமைய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் சங்கரன்கோவில் சரகத் துணைப்பதிவாளர் திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டி யன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா னந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    துணைப்பதிவாளர் கார்த்திக் கவுதம் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
    • கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • பூபால சமுத்திரம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார்.
    • புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் மற்றும் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 59 லட்சம் நிதி பெற்று தந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு அந்தந்த பள்ளி களின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. சங்கர், அய்யனார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதி ராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர் அப்துல் காதர் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வுக்கு தங்கள் ஊர் பள்ளிக்கு கூடுதலாக 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 2 லட்சம் நிதி பெற்று தந்ததற்கு நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியும், பாராட்டு தல்களை தெரிவிக்கப் பட்டது.

    விழாவில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சேர்ம துரை உட்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றி கூறினார்.

    முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 1.57 கோடி நிதியை தமிழக அரசிட மிருந்து பெற்று தந்ததற்கு பூலாங்குளம் பள்ளியின் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றி யம் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபால சமுத்திரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் புதிய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார். தொடர்ந்து ஆலங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு அடிக்கல் நாட்டி னார்.

    விழாவில் ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில அமைப்பு செயலா ளர் சேர்மதுரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், ஆலங்குளம் நகர செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் செல்லத் துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியல் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம் முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் சுற்றுச்சுவரை சீரமைக்க வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யிலும், மத்தளம்பாறை முகைதீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ ஆம்பூர் பாதுஷா பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைகள் அடிப்படையிலும், முதலியார்பட்டி முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர் முகமது கனி கோரிக்கையின் அடிப்படையில் 11-வது வார்டு நைனா முகமது ஜூம்மா பள்ளிவாசலுக்கும், கடையநல்லூர் கிழக்கு பகுதி அல் மூப்பன் கீழத்தெரு நைனா முகம்மது ஜூம்மா பள்ளிவாசலுக்கு கவுன்சிலரும், முன்னாள் நகர செயலாளரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான முகமது அலி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்டவும் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஏற்கனவே சிவபத்மநாபன் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியலை சிவபத்மநாதனிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மற்றும் வக்புவாரிய செயலாளருக்கு சிவபத்மநாதன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

    • பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த சிப்ஸ்களை உணவு மாதிரிக்காக எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார்.
    • தயாரிக்கப்பட்ட சிப்ஸ் தரம் குறைந்தது, பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிக்கை வந்தது.

    தென்காசி:

    தென்காசி வட்டார பகுதிக்குட்பட்ட இலஞ்சி. வள்ளியூர் பகுதியில் உள்ள சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த வாரம் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த சீலிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த நேந்திரன் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உணவு மாதிரிக்காக எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார்.

    இந்நிலையில் சிப்சில் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்திருந்ததாலும், லேபிள் குறைபாடுகள் இருந்ததாலும் அங்கு தயாரிக்கப்பட்ட சிப்ஸ் தரம் குறைந்தது மற்றும் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று அறிக்கை வந்தது. அதனடிப்படையில் சிப்ஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர மாவட்ட நியமன அலுவலர் மூலமாக மாநில உணவுபாதுகாப்பு ஆணையருக்கு அனுமதி கோரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாநில உணவுபாதுகாப்பு ஆணையர் லால்வேனா சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததின்பேரில், தென்காசி வட்டார உணவுபாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன், செங்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சுனில்ராஜா, சிப்ஸ் நிறுவன உரிமையாளருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதமும்,கோர்ட்டு கலையும் வரையில் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் சுரேஷ் ஆஜரானார்.

    ×