என் மலர்
தென்காசி
- விழாவில் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
- நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் அசுரா நண்பர்கள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு அசுரா நண்பர்க ளின சமூக பணிகளை பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், ஆலங்குளம் அரிமா சங்கம் ஆதித்தன், முன்னாள் பேரூ ராட்சி துணை தலை வர் தங்கசெல்வம், சமூக ஆர்வலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய இளைஞர் அணி அரவிந்த் ராஜ் திலக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அய்யம்பெருமாள், ஓன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் அசோக், மாரியப்பன், சோனா மகேஷ், தொழிலதிபர் செல்வகுமார்,ராஜன், அசுரா நண்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், குறிப்பன்குளம் இளந்தளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.
சுரண்டை:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கடையநல்லூர் நகராட்சி சேர்மனுமான மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் பிலிப் ராஜா, சுப்பையா பாண்டியன், சண்முகராஜ், முத்தரசு, ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
- விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்குறிச்சி:
கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி அழகம்மாள் புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்
ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், ரேசன் கடைக்கு ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா ரவி, மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், ஏ.பி..நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, ஐந்தாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி, வெங்காடம்பட்டி மன்ற செயலாளர் பாரத், அழகம்மாள்புரம், முத்தம்மாள்புரம், சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆலங்குளம்:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டி யன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன் தொகுப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மருதப்பபுரம் பாண்டியராஜன், அவைத்தலைவர் சண்முக சுந்தரம், துணை செயலாளர் முத்துலெட்சுமி, பசுவதி, வீராணம் வீரபாண்டியன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், நெல்லை வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட மகளிர்அணி செயலாளர் சந்திரகலா, மாவட்ட மாணவரணி செய லாளர் பிரேம்குமார், மாவட்ட தொழிற்சங்க செய லாளர் குத்தாலிங்கம், மாவட்ட விவசாய அணி கிருஷ்ணசாமி, மாவட்ட ஐடி விங் மகபூப் மசூது, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், கீழப்பாவூர் மேற்கு அமல்ராஜ், கிழக்கு இருளப்பன், ஆலங்குளம் தெற்கு பாலகிருஷ்ணன், கடையம் வடக்கு அருவேல் ராஜ், கடையம் தெற்கு முருகேசன், பாப்பாக்குடி டி.கே.சுப்பிரமணியன், கடையநல்லூர் தெற்கு ஜெயக்குமார், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை, சுரண்டை சக்திவேல், பேரூர் செயலாளர்கள் மேலகரம் வக்கீல் கார்த்திக் குமார், குற்றாலம் சேர்மன் கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜன், ஆலங்குளம் கேபி சுப்பிரமணியன், கீழப்பாவூர் ஜெயராமன், முக்கூடல் சகாய அருள் வில்சன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, வக்கீல் அணி சிவக்குமார், ஆலங்குளம் சாந்தகுமார், ராமச்சந்திரன், சதீஷ்குமார், ஜோதி முருகன், முத்துராஜ், வீரபாண்டியன், திருமலைக்குமார், வேல்துரை, ஊத்துமலை இளைய ராஜா குமரேசராஜா, ஊத்துமலை கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கருவந்தா தானியேல் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.
- காரைக்குடி- திருவாரூர் இடையே ரெயிலின் வேகம் அதிகப்படுத்தப்பட இருப்பதால் பயண நேரம் அரை மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
- விருதுநகர்-மானாமதுரை இடையே வேகத்தை 110 கிலோமீட்டராக மாற்ற வேண்டும்.
தென்காசி:
கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும், திங்கள்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்தும் வாராந்திர ரெயிலாக இயங்கியது.
பின்னர் ஜூன் மாதம் முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்தும் வாரம் மும்முறை ரெயிலாக இந்த ரெயில் இயங்கி வருகிறது.
தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20683) தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வருகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20684) செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும். இரு மார்க்கங்களிலும் 764 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி 50 நிமிடங்களில் சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்துடன் பயணிக்கிறது.
தற்போது காரைக்குடி-திருவாரூர் இடையே அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டரில் இருந்து 110 ஆக உயர்த்துவதற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதால் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-
தற்போது காரைக்குடி- திருவாரூர் இடையே ரெயிலின் வேகம் அதிகப்படுத்தப்பட இருப்பதால் பயண நேரம் அரை மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் விருதுநகர்-மானாமதுரை இடையே வேகத்தை 110 கிலோமீட்டராக மாற்ற வேண்டும்.
மேலும் மின்சார ரெயில் என்ஜின் மூலம் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை இந்த ரெயிலை இயக்கினால் மேலும் அரை மணி நேரம் குறையும். தென்காசி -நெல்லை ரெயில் வழித்தட மக்களின் நலன் கருதி செங்கோட்டையில் இருந்து 4.15 மணிக்கு பதிலாக 5.15 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணையை மாற்றி அமைக்கும்போது பயண நேரத்தை 12 மணி 50 நிமிடங்களாக குறைக்க முடியும்.
தாம்பரத்தில் இருந்து மறுமார்க்கமாக வரும்பொழுது காலை 8 மணிக்கு முன்பாக செங்கோட்டையை சென்றடையும் வகையில் அட்டவணையை மாற்றி ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் வாரம் மும்முறை ரெயிலை பயணிகளின் நலன் கருதி தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மேலகரம் அருகே உள்ள பாறைகுளம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பயிர்கள் பயிரிட்டிருந்தார். அதனை அடிக்கடி காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்தது.
இதனால் காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற முருகன் தனது தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். நேற்று மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற முருகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த விவசாயி முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் சில்லரைப்புரவு ஊராட்சியில் நடைபெற்றது.
- மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.
தென்காசி:
தென்காசி அருகே சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சில்லரைப்புரவு ஊராட்சி மன்ற தலைவர் நா.குமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிய, எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் பரிசோதனையை செய்து கொண்டனர்.
முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் முத்துலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பார்வதி, கணேசன், தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன்,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ் மற்றும் மாரிமுத்து, அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செண்பக ராஜன் நன்றி கூறினார்.
- ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம்.
- குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
செங்கோட்டை:
அன்னதோஷம் தீர ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவ தரிசனம் கோடி லிங்கங்கள் பார்த்த பலனை பெற்றுத் தரும் என்ற ஐதீகத்தின் படி ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி செங்கோட்டை பகுதி சிவன்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகிரி பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கிட்டப்பா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், நகர துணைச் செயலாளர் குரு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
- திப்பணம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை சார்பில் டி.எம்.பி. பவுண்டேசன், திப்பணம்பட்டி கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திப்பணம்பட்டி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- சின்னத்தேர் திடலில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கடையம்:
கடையம் சின்னத்தேர் திடலில் வக்கீல் ராஜசேகர் தலைமையில் பத்திரப்பதிவு துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பத்திரபதிவு துறையில் சொத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும் பல மடங்கு உயர்த்த உத்தேசித்து வருவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முத்தையா, மகாமைதின், வக்கீல் ஜெயக்குமார், முல்லைநில தமிழர் விடுதலை கட்சி கரும்புலி கண்ணன்மற்றும் சுப்பிரமணியன், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கண்காட்சியினை தென்காசி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- பயனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்கள், காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யில் நேற்று நடைபெற்றது.
மேலும் குருவிகுளம் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையினர், தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டார தோட்ட க்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குருவிகுளம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிக்கு நலத்திட்ட உதவியாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் மின்கல மருந்து தெளிப்பான் முழு மானியத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி வட்டார தோட்டக்கலைத் துறை யினர் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னையில் ஊடு பயிராக காய்கறி சாகுபடி செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப் பட்டன.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக பயனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொ ருட்கள் மற்றும் காய்கறி நாற்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வேளா ண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஊமைத்துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) கனகம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சுப்பையா, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனை த்து வட்டார தோட்ட க்கலை உதவி இயக்கு நர்கள், அனைத்து துறை அலுவ லர்கள், அனைத்து விவ சாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






