ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

விழாவில் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் அசுரா நண்பர்கள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு அசுரா நண்பர்க ளின சமூக பணிகளை பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், ஆலங்குளம் அரிமா சங்கம் ஆதித்தன், முன்னாள் பேரூ ராட்சி துணை தலை வர் தங்கசெல்வம், சமூக ஆர்வலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய இளைஞர் அணி அரவிந்த் ராஜ் திலக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அய்யம்பெருமாள், ஓன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் அசோக், மாரியப்பன், சோனா மகேஷ், தொழிலதிபர் செல்வகுமார்,ராஜன், அசுரா நண்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், குறிப்பன்குளம் இளந்தளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com