சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் இனிப்புகளை வழங்கினார்.
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், தலைமை கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுரண்டை நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகளை சேர்மன் வள்ளி முருகன் வழங்கினார்.விழாவில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com