என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் வாழ வேண்டும்.
    • ரத்ததானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண்தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ராசா மிராசுதார் மருத்துவமனை சமூக மருத்துவத் துறை, தமிழ்நாடு உடல் உறுப்புதான அறுவைசிகிச்சை துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பவா பிரசாரம்நிகழ்ச்சியின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது, ஆயுஷ்மான் பவா பிரசாரம் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடைபெறும். இன்று இரண்டாவது நிகழ்வாக செவிலியர் பயிற்ச்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடல் உறுப்புதான விழிப்புணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மக்கள் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இப்பேரணி அமைந்தது.

    இதன் மூலம் மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வகை செய்திட குருதி தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்றார்.

    இதில் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுப்புராம், இணைப்பேராசிரியர்கள் சிவச்சந்திரன், லியோ, உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

    அம்மாப்பேட்டை:

    கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் எடவாக்குடி 100 நாள் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று சாலியமங்கலம்- பாபநாசம் நெடுஞ்சாலையில் களஞ்சேரி அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பயிற்சி நிலையத்தில் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட ப்படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களுக்கோ 94435 87759, 94860 45666 அல்லது முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரியில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

    கும்பகோணம்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இதில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர தி.மு.க. செயலா ளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ரேவதி, புனிதவள்ளி, கவுன்சிலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    பீகார் மாநிலம் ஹார்பூர் டோலா மாவட்டம் செம்ரகத் ஹார்பூர் பகுதியை சேர்ந்தவர் பின்ஹாச்சல் டோம் (வயது 48) தொழிலாளி. இவர் மதுரையில் தங்கி வேலை பார்ப்பதற்காக தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு அந்த ரயில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள மேலவழூத்தூர் பகுதியில் வந்த போது திடீரென பின்ஹாச்சல் டோம் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் உடனடியாக தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தலைமை காவலர் சரவண செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பின்ஹாச்சல் டோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சாவூர் மேல அலங்கத்தில் வடபத்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல அலங்கத்தில் வடபத்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவி லில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வடபத்ர காளியம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடபத்ரகாளியம்மனை மனமுருகி தரிசனம் செய்தனர்.

    • தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ப்படும்.‌
    • தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18-வது இடத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிடை மாற்றம் செய்ய ப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி தஞ்சை மாநகரா ட்சி ஆணையராக நியமிக்க ப்பட்டார் . இன்று அவர் தஞ்சை மாநகராட்சி ஆணையராக பொறுப்பே ற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது :-

    தஞ்சை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கி யத்துவம் கொடுக்க ப்படும். கடந்த ஆணையர் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பணிகள் தொ டர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சை மாநகராட்சி வரி வசூலில் 18 -வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.

    • தொடர் திருட்டால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • 4 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் சுற்று வட்டார பகுதியில் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் கம்பிகள் உள்பட பல்வேறு திருட்டு தொடர்ந்து நடை பெற்று வந்தன. இது குறித்த புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. தொடர் திருட்டால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு அகரமாங்குடி பகுதியில் நெடுஞ்சாலை பணிக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பிகளை 4 வாலிபர்கள் திருட முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 4 திருடர்களையும் விரட்டி பிடித்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படை த்தனர். பிடிபட்ட 4 வாலிபர்கள் அகரமாங்குடி, பொன் மான்மேய்ந்த நல்லூர்,பெருங்கரை.கா வலூர் பெருமாக்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் கம்பிகள் உள்பட பல்வேறு திருட்டில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் 4 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
    • முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர் அருண்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெங்கசாமி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தம்பி அய்யன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வீர சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முகாமை ஆலத்தூர் ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி திராவிட ச்செல்வன் தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர்கள் தமிழ் பிரியா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, "நூலகமும் மாணவர்களும்" என்ற தலைப்பில் பள்ளியின் கணித ஆசிரியர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

    • பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது கருவேல மர முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மனோரா, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மரக்காவலசை, சம்பைப ட்டினம், செந்தலை, மந்திரி பட்டினம், அண்ணாநகர், கணேசபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை கோடுகளை மறைக்கும் அளவிற்கு சாலையில் உள்ளது.

    இதனால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.

    மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களில் உள்ள கிளைகளில் உள்ள முள் குத்தி காயம் ஏற்படுகிறது.எனவே மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக சாலையை மறைத்து வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    ×