search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loudspeakers"

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோல் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    அதேபோல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்கள் கைகளில் தங்களது ஓட்டுநர் உரிமத்தையும் நடத்துனர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும் பெயர் பேட்ச் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    • பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் போலீசார் உதவி மையத்தில் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய பஸ் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இந்த உதவி மையத்தில் இருந்து நேரடியாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இருந்தாலும் சிலர் போக்கு வரத்து விதிமுறைகளை மதிக்காமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவது டன் இதை தட்டிக் கேட்கும் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை வீடியோவில் பார்க்கும் போலீசார் ஒவ்வொரு முறையும் நேரில் சென்று சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

    அதன்படி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வியாபாரிகளின் உதவியுடன் 8 ஒலிபெருக்கிகள் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் செயல்பாட்டை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தொடங்கி வைத்தார்.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×