search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater Catchment"

    • ஏரிகளில் அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
    • மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தஞ்சை கனிம வள உதவி இயக்குநர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி ஆச்சாம்பட்டி, உசிலம்பட்டி, துருசுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குறைந்த பரப்பிற்கு அனுமதி பெறப்பட்டு பல ஏக்கர் பரப்பில் மண் எடுத்து வருகின்றனர்.

    சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பருவமழை காலங்களில் இதில் மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×