என் மலர்
தஞ்சாவூர்
- சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
- மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
பூதலூர்:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.

மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.
நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை:
"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் பா.ஜ.க. கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தலைமை தபால் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-
எனது சுற்றுப்பயணம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பதை தேசிய தலைமையும், கூட்டணி தலைவரும் முடிவு செய்வார்கள்.
பா.ஜ.க.வை பொறுத்த வரை தீவிரமாக யாரையும் எதிர்ப்பதில்லை. கட்சியின் கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்க்கிறோம்.
தனிப்பட்ட முறையில் இதுவரை யாரையும் எதிர்ப்பது கிடையாது. இனிமேலும் அது இருக்காது. கரூர் சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டம் போடும் எந்த இடத்திலும் போலீசார் நிற்பதில்லை. மதுரை இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். ஆனால் அங்கு ஒரு போலீசார் கூட இல்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு முறையாக அனுமதி தர போலீசார் மறுக்கிறார்கள். கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் கூறி வருகிறேன். த.வெ.க.வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை.
தமிழக பா.ஜ.க. தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆகவே எனக்கு 6 மாதங்கள் முடிந்துவிட்டதால் மீதம் 2½ ஆண்டுகள் தான் பதவிக்காலம் உள்ளது.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலம் முடிய இன்னும் 2½ மாதங்கள் தான் உள்ளது. அதனால் தி.மு.க. ஆட்சி முடிய கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது.
தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி கூட்டணி பலம் தான் வெற்றிக்கு காரணம் என்றால் 2011-ல் தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
தற்போது தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர். எனவே 2026-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் உறுதி.
த.வெ.க.வுக்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறுமா என்று தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட த.வெ.க.வுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா விற்கப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம்,
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளா் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூா் நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு,
தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணை கால்வாய் சாலை, திவான்நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர் பீடரில் அருளானந்தநகர், பிலோ மினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர்நகர், பாத்திமாநகர், அன்புநகர், மேரீஸ் கார்னர் பீடரில் திருச்சி ரோடு, வ.உ.சி நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,
டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஹவுசிங் யூனிட் பீடரில் எஸ்இ ஆபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலா நகர் பீடரில் புதிய வீட்டுவசதி வாரியம், எலிசா நகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், விபி கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர் பீடரில் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை யேசு கோவில், பிஷப் காம்ளக்ஸ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
- உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல்
பாபநாசம்:
பாபநாசம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பொறுப்பு ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாபநாசம் கே.வி துணை மின் நிலையத்தில் நாளை 1-ந்தேதி பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டார வாடை, இனாம் கிளியூர், நல்லூர், ஆவூர், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல், வீரமங்க லம், இடை யிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
- சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- சப்தகிரிநகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன் நகர்,
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மருத்துவக்கல்லுரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லுரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, ஆர்.ஆர்.நகர், புதியபஸ்நிலையம், புதியவீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கடம்நகர், கரூப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரிநகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன் நகர், ஜெபமாலைபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.
ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு(வயது20). இவர், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில், என்ஜினீயரிங் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த விஷ்ணு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
போலீசார் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்டபோது அங்குள்ள சுவரில் 'என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதப்பட்டு இருந்தது. இதை விஷ்ணு எழுதி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
பெயரின் முன்பு 'J ' என்ற இன்ஷியலும் எழுதப்பட்டு இருந்தது. இதை வைத்து போலீசார் யார் அந்த பாபு? என விசாரித்தபோது, பாபு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர் விஷ்ணு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது உயிரிழப்புக்கு ஆசிரியர் தான் காரணம் என உயிரிழந்த கல்லூரி மாணவர் விஷ்ணு சட்டை பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது.
- நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
- ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர்.
இந்த நிலையில் போதிய முன்னேற்பாடு செய்யாதது, லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் தாமதமாவதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அவ்வப்போது மழை பெய்து மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தற்போது 17 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்பதை கடந்து 20 முதல் 25 சதவீதம் வரை நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதை கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலும், சாலையிலும் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனா்.
எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதமும் அனுப்பியது.
இதையடுத்து, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. இதில் ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய இருந்தனர்.
அதன்படி, தஞ்சையில் இன்று 2-ம் குழு வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரை கோட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்தனர். இந்த ஆய்வு பணிகளை முடித்து பிற்பகலில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய குழுவின் ஆய்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஆய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆய்வு செய்யும் தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
22 சதவீத ஈரப்பதத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு இந்த ஆய்வு ஒத்திவைப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் மீண்டும் மத்திய குழுவினர் உடனடியாக நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் நான் தான் என பல பேர் போட்டி போடுகிறார்கள்.
- 12 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் காரணம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே காட்டாத்தி உஞ்சியவிடுதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது.
நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உஞ்சை அரசன் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் நான் தான் என பல பேர் போட்டி போடுகிறார்கள். அந்த இடத்திலும் நாம் இல்லை, ஆனாலும் நம்மை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால், நாம் கருத்து களத்திலே தெளிவாகவும், துடிப்பாகவும் இருக்கிறோம், கண்ணில் விழுந்த தூசியாக இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் என்கிற துரும்பு கண்ணில் விழுந்து விட்டது. கண்ணை கசக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நெரூடலாக இருக்கிறது.
12 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் காரணம். குடியரசு தலைவராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. தீர்மானிப்பதல்ல, ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவாத அமைப்பாக இருப்பதை தாண்டி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






