என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டினர்.
    • இவர் சட்டவிரோத மது விற்பனையை தடுத்தவர் ஆவார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருப்புல்லாணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்ட ராக பொறுப்பேற்றார்.

    பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து துரித நடவ டிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தை களுக்கு கல்வி சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். திருப்புல்லாணி வட்டாரத் தில் சட்ட விரோத மது விற்பனையையும் தடை செய்தார். 4 மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதை பொது மக்கள் அவ்வப் போது பாராட்டி வந்துள்ளனர். இந்தநிலையில், திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்து நகர் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த பணியிட மாற்றதை மறுபரிசீலனை செய்து திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜாவின் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் தேவ ரம்பூர் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எல்கை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்ற பெரிய மாடு களுக்கு தேவரம்பூர் விலக்கு ரோட்டில் இருந்து 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் விழா குழு வினரால் நிர்ணயம் செய்யப் பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராம்நாடு, தேனி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்ட னர். இதில் முதல் பரிசாக பரவை நகரத்தைச் சேர்ந்த முத்து தேவருக்கும், 2-ம் பரிசாக பூக்கொள்ளை காளிமுத்துக்கும், 3-வது பரிசை பரளி கிராமத்தைச் சேர்ந்த கேரளா பிரதர்சும் பெற்றனர். நினைவு பரிசை தேவரம்பூர் கிராமத்தை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. அதே போல் சின்ன மாட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதல் பரிசை குண்டேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த கனக வல்லி, 2-ம் பரிசை தேவரம் பூர் கிராமம் ராமநாதன், 3-ம் பரிசை தேவரம்பூர் கிராமம் சுதாகர், 4-ம்பரிசை பொய்கரைபட்டி பாலு ஆகியோருக்கும் விழா குழுவினரால் வழங்கப்பட் டது.

    மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகளும் சாரதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடு களை தேவரம்பூர் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இப் பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர் களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    • சொர்ணவாரீசுவரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேேராட்டத்தை கண்டு களித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூரில் பிரசித்தி பெற்ற சொர்ணவாரீசுவரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவலில் கடந்த 26-ந்தேதி ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாட்களில் இருந்து தினமும் காலை, இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி சொர்ண வாரீசுவரர்-சாந்தநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேேராட்டம் நேற்று நடந்தது. மாலை 4.20 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெரிய ேதரிலும், அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் பக்தி கோஷம் முழங்க ஏராளமானோர் தேரை வலம் பிடித்து இழுத்தனர்.

    வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேேராட்டத்தை கண்டு களித்தனர். இரவு தேர் நிலையை அடைந்தது.

    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ம.தி.மு.க.உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் செயலாளராக பதவியேற்க அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலான 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் துணை பொது செயலாளரான ராஜேந்திரன் தேர்தல் ஆணையாளராகவும், பொன்முடி, செல்வராஜ் துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரனும், அவைத்தலைவராக திருப்பத்தூர் கருப்பூரை சேர்ந்த சந்திரன், பொருளாளராக காளையார்கோவிலை சேர்ந்த சார்லஸ் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

    • மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் பழமையான கோவிலாகும். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் இந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.

    மதுரை அன்னை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த ஜூன் 23-ந் தேதி ஆனி மாத திருமஞ்சன திருவிழா விற்கான காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 8-ம் நாளில் மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    அதை தொடர்ந்து திரு விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் விமரிசையாக இன்று நடந்தது. இதையொட்டி முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகனும், 3-வது தேரில் சண்டி கேசுவரரும், பெரிய தேரில் பிரியாவிடை உடனான சொக்கநாதரும், 2-வது பெரிய தேரில் அன்னை மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊர் அம்பலகாரர் விஸ்வ நாதன், தேவஸ்தான கண்கா ணிப்பாளர் தன்னாயிரம், கௌரவ கண்காணிப்பாளர் மாணிக்கம், பெரிய சாமியாடி சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.

    • கலைஞர் கோட்டத்தை பார்க்க பள்ளி மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. அழைத்து சென்றார்.
    • அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது.

    மானாமதுரை

    திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்ப்பதற்காக தமிழரசி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மானாமதுரை தொகுதியை சேர்ந்த திருப்புவனம், இளை யான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து செல்ல முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி மாணவ-மாணவிகளை திருவாரூர் அழைத்துச் சொல்ல 4 அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது. மானாமதுரை சிவகங்கை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர் புறம் உள்ள தனியார் மகாலில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    அதன்பின் மாணவ- மாணவிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ்களில் ஏறி அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவர் முருகேசன் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் ராஜாமணி, கடம்பசாமி, வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, ரவிச் சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் முத்துசாமி, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.

    இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    • நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும்.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கூட்டு துப்புரவுப் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்,சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் அருகி லுள்ள, ராமச்சந்திரா பூங்கா பகுதியில் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து இடங்களிலும் ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மண்ணை பாதுகாப்போம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற குறிக்கோளுடன் பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நகர்ப்பகுதி மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பையை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வருங்காலங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தவிர்த்து மண் வளத்தை பாதுகாப்பதுடன் சுகாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும்.

    இதேபோன்று, சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில், குப்பைகளை தங்களது பகுதிகளிலுள்ள தெருவோரங்களில் போடாமல், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, முறையாக தங்களது வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தங்களது பகுதிகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் கீழ், குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடு வோம்-என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில், சிவகங்கை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நகரில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட வைபவம் வெகு விமரிசை யாக நடந்தது. இவ்விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சி யான 9-ம் திருநாளில் திரு தேரோட்ட வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக அலங்கரிக்கப் பட்ட பெரிய தேரில் உற்சவர் புல்வநாயகி அம்மன் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது. பின்னர் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேவரம்பூர் கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார் மற்றும் பொன்னரசு கூத்த அய்ய னார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடை பெற்றது.

    முன்னதாக கோவில் முன்பு வைக்கப்பட்ட 5 பதுமைகளுக்கு (குதிரை களுக்கு) வண்ண பலூன், கண்ணாடி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பூஜைகள் மற்றும் தீப ஆராதனை நடந்தது.

    அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதுமைகள் கொண்டுவரப்பட்டு மந்தை கோவில் வீடு முன்பாக அமைக்கப்பட திடலில் வைக்கப்பட்டது. சாரல் மழையில் நனைந்த படி திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்க ளின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
    • 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் உலக புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழா தொடக்கமாக பங்கு இறைமக்கள் திரு இருதய ஆண்டவர் உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்து ஆலயத்தின் அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்ட அருட்பணியாளர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து மதுரை ஞானஒளிபுரம் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சிவகங்கை வியானி நிலைய இயக்குனர் அருள்தந்தை அமலன், எட்வர்ட், கேரளாவை சேர்ந்த அருட்பணியாளர் ஜெரோம், சவேரியார்பட்டினம் பங்குந்தந்தை புஷ்பராஜ் கொடியேற்ற, திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்டோர் கொடியேற்ற திருப்பலி நிறைவேற்றினர்.

    இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் பல்வேறு பங்கு இறை மக்கள் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7-ந் தேதி இரவு திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை சிவகங்கை மறை மாவட்ட (பொறுப்பு) ஆயர் ஸ்டீபன் அந்தோணி திருவிழா திருப்பலியும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியும் நிறைவேற்றுகின்றனர்.

    8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் அ.இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறை மக்கள், மரியின் ஊழியர் சபை சகோதரிகள் செய்துள்ளனர்.

    ×