என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
தேவகோட்டை நகர் சரஸ்வதி வாசக சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் உள்ளனர்.
நேற்றிரவு முனியம்மாள் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவர் அலறிக் கொண்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் உள்ள தேவகி என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் முனியம்மாள் மற்றும் தேவகியின் வீடுகள் எரிந்து நாசமாயின. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் கருகி சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் முத்துக்குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
இதேபோல் இளையான்குடி வட்டாரம் கீழாயி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், இருளாண்டி மகன் திருநாவுக்கரசுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த குழந்தை திருமணங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசிதர குமார், பணியாளர்கள் சத்தியமூர்த்தி, நாகராஜ், சமூக நல அலுவலர் காளீஸ் வரி ஆகியோர் 2 சிறுமிகளின் வீட்டுக்கும் சென்றனர்.
அவர்களது பெற்றோரிடம் திருமண வயது, சட்ட எச்சரிக்கை போன்றவை குறித்து விளக்கினர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுமிகளின் பெற்றோர் குழந்தை திருமணங்களை நிறுத்த சம்மதித்தனர். அதன் பேரில் அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கி ரத்த தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ரத்த தானம் செய்வதன் மூலம் ஆபத்தான கால கட்டத்தில் ஒருவரின் உயிரை காக்க முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ரத்தத் துளி வடிவில் அமர்ந்து தங்கள் கைககளில் இருந்த சிவப்பு வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மானாமதுரை:
18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.
அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.
இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-
18 எம்.எல்.ஏக்களும் தினகரன் தலைமையில் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றோம். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் நாங்கள் தினகரன் தலைமையில் தான் தொடர்ந்து இயங்குவோம்.

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் அமையும். தினகரன் தமிழகத்தின் முதல் வராவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரமக்குடி தொகுதி டாக்டர் முத்தையா கூறுகையில், இந்த தீர்ப்பானது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.
மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-
நீதிமன்ற தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்தோம். நீதி மன்றம் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் நேர்மாறாக தீர்ப்பு உள்ளது. 9 மாதங்களாக எம்.எல்.ஏ. பணியை மேற்கொள்ள முடியவில்லை. தொகுதி மக்கள் என்னிடம் குறைகளை நேரிலும், போனிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தகுதி நீக்கம் என்ற ஒரே காரணத்திற்காக எனது தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் எந்த வித பணியையும் செய்வதில்லை.
தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது தீர்ப்பு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்பேன் என்றார். #TTVDhinakaran #MLAsDisqualified
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை, வழியாக செல்லும் வைகை ஆற்றில் 3 ஊர்களில் மணல் குவாரி அமைக்க அரசு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
மானாமதுரை வைகை ஆற்றில் 30 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் கடலாடி, அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் குடிநீர் திட்டம், விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே வைகையில் மணல் அள்ள அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஏ.ஆர்.பி. முருகேசன், தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews
இது தவிர www.tnhealth.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் வழங்கி கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா கூறுகையில், கடந்தாண்டு அரசு ஒதுக்கிடு 750 விண்ணப்பங்கள். 250 நிர்வாக விண்ணப்பங்களை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன.
இந்தாண்டு 1600 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு 1100-ம், நிர்வாக ஒதுக்கீட்டில் 500-ம் வந்துள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக வேலை நேரங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வங்கி காசோலை பெற மருத்துவ கல்லூரி வளாகத்தில் வங்கியின் சிறப்பு தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். ஜி.எஸ்.டி. காரணம் இல்லை. உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்து தி.மு.க. வும், காங்கிரசும் தான்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Seeman #Vaiko
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் சிவநாதன் (வயது 22). சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் இவர், தற்போது சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.
2 நாள் விடுமுறை என்பதால் சிவநாதன் மானாமதுரை வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்கிய அவர், இன்று காலை எழுந்து வராததால் பெற்றோர் சென்று பார்த்தனர்.
அப்போது சிவநாதன் அங்கு மயங்கி கிடந்தார். அவரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, விஷம் குடித்திருப்பது தெரியவந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவநாதன் பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
மோடி ஆட்சியில் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டது என்பது அனைத்து விதிகளையும் மீறி நடந்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இந்த அரசு பதவி விலக வேண்டும். இங்கு இந்தி திணிப்பதற்கும் இடமில்லை. இந்துத்துவாவிற்கும் இடம் இல்லை. இதை எதிர்த்து போராடுவோம். 15 லட்சம் வங்கியில் போடுவேன் என்று சொன்னவர்கள் 15 காசு கூட போடவில்லை.
தூத்துக்குடியில் 20 ஆண்டுகாலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவல்துறை அனைத்து விதிமுறைகளையும் மீறி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
மத்திய அரசை பார்த்து அஞ்சுகிறார் தமிழக முதல்- அமைச்சர். துப்பாக்கியால் சுட்டது சரியா? தவறா? என கூட சொல்லத் தெரியாத முதல்-அமைச்சர் நாட்டில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? முதல்-அமைச்சர் அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். யாரைப்பார்த்து அஞ்சுகிறார் முதல்வர்?
தமிழகத்தில் பா.ஜ.க. எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. சேகர் ரெட்டி, அமைச்சர் வீட்டில் பிடிபட்ட பணம் எது? கள்ள நோட்டு அடிக்க முடியாது என்று சொன்னார்கள். கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அடித்து விட்டார்கள். காங்கிரஸ் பதவி விலகும் போது இக்கட்டான சூழ்நிலையிலும், இந்திய பொருளாதாரம் 6.4 என்ற அளவில் தான் இருந்தது.

4 ஆண்டுகால மோடி ஆட்சியில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் முடக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதியில் கடந்த ஆண்டை விட 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2017-18ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக குறைந்துள்ளது. வியாபாரிகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி. வரியை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருத்தியமைக்கும். பா.ஜ.க.வின் ஆட்சியில் ஏற்றுமதியின் வளர்ச்சி பூஜ்யமாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கான காரணம் இரண்டுக்கும் 10 சதவீதம் வரியை உயர்த்தியது தான். பொருளாதாரத்தை குலைத்து, வரியை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்துள்ளது மோடியின் ஆட்சி.
10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 3 மடங்கு உயர்ந்தது. இந்தியாவில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார். #Congress #PChidambaram #PMModi






