என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அண்ணா பொது கிளை நூலகத்தில் புத்தக தினவிழா நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா பொது கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமை தாங்கினார். 

    வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் ஜெயகாந்தன் வரவேற்றார். திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் சிறப்புரையாற்றினார். 

    திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு மேல்நிலைபள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பேரூராட்சி  தலைவர் வழங்கினார்.

    தந்தானே ஈனா எழுதிய நற்சிந்தனை கதைகள் எனும் நூலை சிவகங்கை வாசகர் வட்ட தலைவர் அன்புதுரை அறிமுகம் செய்தார். கவிஞர் வைகை பாரதி வாஹித் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். மக்கள் இசை பாடகர் வைகை பிரபா நூலாசிரியரை அறிமுகம் செய்தார். பட்டிமன்ற நடுவர் அப்பச்சி சபாபதி வாழ்த்தி பேசினார்.

    கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா எழுதிய ஒலிக்கட்டும் பறை எனும் கவிதை தொகுப்பு புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது. முனைவர் ஹேமாமாலினி அறிமுகம் செய்தார். நூலாசிரியரை அறிமுகம் செய்து புதுவயல் வாசகர் வட்ட தலைவர் தமிழ்மதி நாகராசன் பேசினார். கவிஞர் பொதிகை கோவிந்தராஜன் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். பூஜிதா கருத்துரை வழங்கினார்.  

    பேராசிரியர் கோபிநாத், பாவலர் சக்திவேல், அன்னக்கொடி கமலநாதன், கவிஞர் லட்சுமி சிவபார்வதி, எழுத்தாளர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கவிஞர் பரம்பு நடராஜன், புரவலர்கள் ராஜசேகரன், கணபதி, இளையராஜா, சண்முகம், ஞானசேகரன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளர்களும், நாராயணன், குணசேகரன் ஆகியோரும் செய்திருந்தனர். கலைஞானம் நன்றி கூறினார்.

    சிவகங்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை வட்டம் பறையன்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்து கொள்ளுதல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதிபரமேஸ்வரி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.  எதிர்காலத்தில் உயர் பதவிகளை அடைய கல்வி ஒன்றே சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பற்றி தவறான நடவடிக்கைகள்குறித்த செய்தி தினம்தோறும் வருகிறது. இதை தவிர்ப்பதற்கு மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும்.  மாணவிகள் புகழ்ந்து பேசுபவர்களிடம் கவனமாகவும், எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும்.  

    தனக்கு பாதுகாப்பு தேவையின் போது 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்படும்.  அதுபோல் பெண்கள் குடும்ப வன்முறை போன்ற பாதிப்பின்போது பாதுகாத்து கொள்ள 181 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் முதியவர்கள் உதவிக்கு 14567 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவித்தால் உடனடியாக உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    முகாமில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்வசந்த், முத்தனேந்தல் வட்டார மருத்துவ அலுவலர் கணேசபாண்டியன், தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி,  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி, சைல்டு லைன் ஜுலி ஆகியோர் பேசினர். இதில்ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்,  சட்டம் சார்ந்த தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர்.
    தேவகோட்டை அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த உருளிகோட்டையை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்தி வயது (19). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வெளியே சென்ற கார்த்தி மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று கார்த்தியை தேடினர்.

    இதற்கிடையே‌ மாயமான கார்த்தி சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள நடேசபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடப்பது இன்று காலை தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் கார்த்தி உடலை மீட்டனர். பின்னர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மதுரைதொண்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார்த்தி சாவில் மர்மம் உள்ளதா ?என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் உருளி கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேவகோட்டையில் சாலையோர பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    தேவகோட்டை

    தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடைசெய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ்நிலையத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ்நிலையம் அருகே எவ்விதமான பேனர்வைக்க அனுமதி வழங்க வில்லை. 

    ஆனால் தற்போது திடீரென பஸ்நிலையபகுதியில் பேனர்கள் பிரமாண்டமான அளவில் வைக்கப்பட்டு வருகின்றன. பிளக்ஸ் பேனர் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் நகரில் இறப்பு போன்ற நிகழ்வுக்காக மட்டுமே பேனர் வைக்கும் போதும் அதனை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை.

    குறிப்பாக அருகிலேயே புறக்காவல்நிலையம் இருந்தும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது சமூகஆர்வலர்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.
    மானாமதுரையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனுசூயா மஹாலில் நாளை (28ந்தேதி) காலை 10 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. 

    இலவச வீட்டுமனைபட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிகடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்பஅட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள்  இந்தமுகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 5 நாட்கள் நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் எனப்படும் பிரதமரின்  விவசாயிகள் கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள்  பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    பி.எம். கிசான்  பயனாளிகள்  அனைவருக்கும் கிசான் கடன்அட்டை கிடைப்பதற்கு அரசினால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வரப்படுகிறது. இதற்கான கிசான் கடன்அட்டை சிறப்பு வாராந்திர முகாம், சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்  இன்று (27&ந் தேதி) முதல் வருகிற 1ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

    முகாமில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.  எனவே பி.எம். கிசான் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் மற்றும் இதரவிவசாயிகள் கலந்துகொண்டு கிசான் கடன்அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பெற்று, சேவை வழங்கும் வங்கிகளில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து கிசான் கடன் அட்டை பெற்று பயனடையலாம். 

     மேற்கண்ட கிசான் கடன்அட்டை மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கையில் இந்தியன் ஆயில் எரிசக்தி சேமிப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கையில் இந்தியன் ஆயில் எரிசக்தி சேமிப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செந்தில்குமார் இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி முக்கியம் என்றார்.  150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். 

    சிவகங்கைநகர் பகுதி முழுவதும் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் நடந்து செல்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கோஷம் எழுப்பி சென்றனர். 

    மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வழங்கினர்.  நாம் நமது செயற்பாடுகளின் மூலம் எல்லா துறைகளிலும் கனிமவளங்களையும் மற்றும் பெட்ரோலியப் பொருட்களையும் தொடர்ந்து சேமிப்பதற்கான பல முயற்சிகளை கடைபிடிப்போம். இதன்மூலம் நமதுநாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கனிமவளங்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். 

    கனிமவளங்கள் மற்றும் பொருட்களை வீணாக பயன்படுத்துவதை உபயோகித்து தவிர்க்கவும், சுற்றுச் சூழலைப் துய்மையான எரிபொருளை பாதுகாக்க வும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்துக் கொண் டனர். இதில் இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி தினேஷ் மற்றும் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் பாபு கொங்கேஷ்வரன் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் 143-வது பாஸ்கு விழா நடந்தது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் 143-வது ஆண்டு பாஸ்கு விழா  2 நாட்கள் நடைபெற்றது.     இடைகாட்டூர் உலக  புகழ் பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை  சித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்.

     இந்த ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவா லயத்தின் முன்புள்ள அலங் கரிக்ப்பட்ட அரங்கில் “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு” நாடகமாக நடித்து  காட்டப்பட்டது.

    முதன் முறையாக டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு   இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயா ளிகளை குணமடைய செய் தல்  உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்து  காட்டப் பட்டன. 

    2-ம் நாள் பார்வை இல்லாவதருக்கு பார்வை வழங்குதல், இறந்த சீடரை உயிர் பித்தல், தொழு நோயா ளிகளை குணமடைய செய் தல், யூத அரசு ஏசுவை கொடுமை செய்து தலையில் முள்கிரிடம் அணிவித்து சிலுவையில் அறையும் காட்சிகளையும்,   சிலுவையில் இருந்து உயிர்தெழும் காட்சி களையும் நடித்து காட்டினர். இந்த நாடகத்தில்  100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து நடித்தனர். 

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் செய்திருந் தது. முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜைகளை  திருத்தல அருட்பணியாளர் இமானுவேல் தாசன் செய்தார்.

     மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
    கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேம்பத்தூரில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகிஅம்மன் சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் 88 ஆண்டுகளுக்கு பிறகு   கடந்த மார்ச் 6ந்தேதி நடந்தது. 

    இதையடுத்து  48ம் நாள் மண்டல பூஜை விழாவில் சிவபுராண  பாராயணம், கணபதி ஹோமம் , மகா அபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் இரவு திருவிளக்கு பூஜை வழிபாடும் நடந்தது. 

    இதில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மன் தெற்கு நோக்கியும், பிரம்மா தனி சன்னதியிலும், நவகிரகங்களில் புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சி தருவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

     மதுரை பெரியார் பஸ்நிலையத்தில்  இருந்து வேம்பத்தூருக்கு  பஸ் வசதி  உள்ளது.

    சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

     சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில் தனியார் வங்கி   பங்களிப்பு டன்  மேற்கொள்ளப்பட உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது. இதை  கலெக்டர் மதுசூதன் ரெட்டி  தலைமையில்  அமைச்சர்  கேஆர்.பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர்  மு.க.ஸ்டா லின் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து  நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் துரித மாக நடவடிக்கை  எடுத்து வருகிறார். அதனடிப்படை யில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்து வாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மத குகள் மற்றும் பிற நீர்நிலை கள் ஆகியவற்றை புனரமைத் தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலிங்குகள், மதகு களை மறு கட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணி களை மேற்கொண்டு, நீர்நிலைகளை சீரமைத்திட அறிவுறுத்தி உள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி  ஒன்றி யங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சி  பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், குட்டை, வரத்துவாய்க் கால், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    திருப்பத்தூர் பெரிய கண்மாயை பொறுத்த வரை மருதுபாண்டியர்கள் காலத் தில் உருவாக்கப்பட்ட கண்மாய் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள முடிமலை, கரந்தமலை, களவற்காடு வனப்பகுதியில் பாலாறு உற்பத்தியாகி, நத்தம் அருகில் உள்ள செந்துரை கிராமத்திலிருந்து ஆறாக வடிவு பெற்று திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் பகுதிகளில் தென்கிழக்காக பாய்ந்தோடி முடிவில் திருப்பத்தூர் பெரியகண்மாயை வந்தடைகிறது. 

    இந்த கண்மாயின் பாசனப்பரப்பு 1023.93 ஏக்கர் (414.38 ஹேக்டர்) ஆகும். 75 மில்லியன் கனஅடி நீர்தேக்கும் திறன் கொண்ட தாகும்.

    திருப்பத்தூர் பெரிய கண்மாயில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றி சீரமைப்பதன்  மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப் பட்டு விவசாய  பணி, குடிநீர் தேவைகள் மேம்படுவதோடு கால்நடைகளுக்கும், கூடுதல் நீர் ஆதாரம் கிடைப்பதற்கும் வழிவகை ஏற்படும். 
    இவ்வாறு அவர் பேசினார்.

    ஊராட்சி ஒன்றிய  தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர்   கோகிலாராணி, மானாமதுரை நகர்மன்ற  தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆவின் தலைவர்   சேங்கைமாறன், செயற் பொறியாளர் (நீர்வளத்துறை, மணிமுத்தாறு, வடிநிலக் கோட்டம், தேவகோட்டை)  சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் கான் முகமது, உதவி செயற் பொறியாளர் (சருகனியாறு வடிநில உபகோட்டம், திருப் பத்தூர்)  சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த மரிய வளன், உதவி பொறியாளர் (பேரூராட்சிகள்) ரங்கராஜன், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், ஐ.சி.ஐ. சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணன், மேலாளர்கள் ராமலிங்கம், கண்ணதாசன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.

    ஒழுகமங்கலம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஒழுகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், ஒவலிபட்டி, ஒழுகமங்கலம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமின் முன்னதாக வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலையில இப்பகுதிக்கு உட்பட்ட விளை நிலங்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றிற்கான பெயர் திருத்தம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கணினி சம்பந்தப்பட்ட திருத்தங்களுக்காக பயனாளிகளிடமிருந்து சுமார் எட்டு மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும் மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய்த் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் ரிஹானா பானு, உதவியாளர் முகமது அலி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, வார்டு உறுப்பினர்களாக ஆறுமுகம், சந்திரா, பொன்னாள், சந்திரன், தனலட்சுமி, செயலர் பாண்டியன், பணித்தள பொறுப்பாளர் பாண்டிச் செல்வி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் முகாமில் பங்கேற்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (24ந்தேதி) கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ந்தேதி கொண் டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக நாளை (24ந்தேதி) நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராமசபைக் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களில், தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை (24ந்தேதி) காலை 11 மணியளவில், கிராமசபை கூட்டம் நடத்திடவும், கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த 17கூட்டப்பொருள்கள் மற்றும் 9 இலக்குகள் பற்றி விவாதிக் கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும், உறுதிமொழி எடுக்கவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

    மேலும், கிராமசபை கூட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும் மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (24ந்தேதி) கிராமசபைக் கூட்டத்தினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவும், கிராமசபை நெறி முறைகளை பின்பற்றவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கிராம ஊராட்சிகள்) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×