என் மலர்
உள்ளூர் செய்திகள்

இப்தார் நோன்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
செஞ்சை பள்ளிவாசலில் இப்தார் நோன்பு
காரைக்குடி செஞ்சை பள்ளிவாசலில் இப்தார் நோன்பில் கலெக்டர் பங்கேற்றார்.
காரைக்குடி
சிவகங்பகை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பழமை வாய்ந்த செஞ்சை பள்ளிவாசல் ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜமாத் தலைவர் ஹனிபா தலைமை தாங்கினார்.செயலாளர் அலி மஸ்தான் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், ரமலான் மாதம் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் தானதர்மங்கள் செய்து வருகின்றனர்.மேலும் ரத்ததானம் செய்வதிலும், பேரிடர் காலங்களில உதவுவதிலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக செய்துவருகின்றனர்.அவர்களுக்கு மனமார்ந்த ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதில் காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்க வாசகம், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் கலீல்ரஹ்மான், காரைக்குடி ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல்ரஹ்மான், நகர இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story