search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சு விரட்டு"

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.


    சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.

    விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளச்சி ஸ்ரீ மலையரசி ஸ்ரீ சோனை கருப்பர் ஸ்ரீ ஓட்டத்திடல் காளியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப் ஏற்பாட்டில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா பெரும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • மதுரை அருகே மாடு முட்டி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூைர அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது33). இவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சொந்தமாக மஞ்சு விரட்டு காளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த காளை முனியசாமியை முட்டி குத்தியது.

    இதில் படுகாயமடைந்த முனியசாமி சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்தி ரியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
    • காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.

    இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

    இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    • பாலமேட்டில் வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது.
    • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு வடக்குத்தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புசாமி ஆடி உற்சவ திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வடமஞ்சுவிரட்டு நிகழ்ச்சி மஞ்சமலை ஆற்று வாடிவாசலில் நடந்தது.

    கோவிலில் இருந்து இளைஞர்கள் வடத்தை இழுத்து வந்து வாடிவாசல் முன்பு கட்டினர். பின்னர் மஞ்சமலை கோவில் காளை உட்பட 20 காளைகள் வடத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு இளைஞர்கள் சத்தமிட்டு வரவேற்றனர். இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே நடந்த கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள விராமதி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. வெள்ளைச்சாமி அம்பலம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக மேளதாள ங்கள் முழங்க கிராம பெரியோர்களால் மந்தை கோவிலில் இருந்து புத்தாடைகள் எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்தனர்.

    இந்த மஞ்சுவிரட்டுக்கு மாடுகளை கொண்டு வந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விராமதி கிராமத்தா ர்கள், நகரத்தார்கள், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் விராமதி மாணிக்கம், குமார் அம்பலம், கண்ணன் அம்பலம், பழனியப்பன் அம்பலம், ராமகிருஷ்ணன், பழனியப்பன், சுப்பிரமணியன், பெரிய கருப்பன், ராமநாராயணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

    ×