என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு
- சிவகங்கை அருகே நடந்த கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள விராமதி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. வெள்ளைச்சாமி அம்பலம் தலைமை தாங்கினார்.
முன்னதாக மேளதாள ங்கள் முழங்க கிராம பெரியோர்களால் மந்தை கோவிலில் இருந்து புத்தாடைகள் எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்தனர்.
இந்த மஞ்சுவிரட்டுக்கு மாடுகளை கொண்டு வந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு துண்டுகளும், விருந்து உபசாரமும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விராமதி கிராமத்தா ர்கள், நகரத்தார்கள், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் விராமதி மாணிக்கம், குமார் அம்பலம், கண்ணன் அம்பலம், பழனியப்பன் அம்பலம், ராமகிருஷ்ணன், பழனியப்பன், சுப்பிரமணியன், பெரிய கருப்பன், ராமநாராயணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.






