என் மலர்
உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் சீறிப்பாய்ந்து வந்த மாட்டு வண்டிகள்.
மாட்டுவண்டி பந்தயம்
தேவகோட்மாடை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே வெங்களூர் கிராமத்தில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெங்களூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் மதுஎடுப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயங்கள் நடந்தன.
மாட்டுவண்டியில் 2 பிரிவுகளாக பெரியமாடு, சின்னமாடு என நடந்த பந்தயத்தில் பெரியமாடு போக வர 8 மைல் தூரமும், சின்னமாட்டுக்கு போக வர 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெங்களூர்-தேவ கோட்டை சாலையில் இந்த போட்டி நடந்தது.
20-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெங்களூர் கே.ஆர்.அம்பலம், 2-வதாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், 3-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்தம்பத்தி, 4-வதாக தானாவயல் மாட்டுவண்டியும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேனி மாவட்டம் கம்பம் கோம்பை, 2-வதாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பிரசாத் மொபைல், 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக கடத்தி மணி அம்பலம் மாடுகளும் வெற்றி பெற்றன.
குதிரைவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெங்களூர் கேஆர்அம்பலம், 2-வதாக திருச்சி அருண், 3-வதாக சிவகங்கை மாவட்டம் கண்டதேவி மருதுபிரதர்ஸ், நான்காவது தஞ்சாவூர் குண்டுமணி குதிரைகள் வெற்றிபெற்றன.
வெற்றிபெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர்.
Next Story






