என் மலர்
சிவகங்கை
- கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
- சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தேடி வருகிறார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் உள்ளது.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .
நேற்று இரவு கோவில் பூசாரிகள் வழக்கம் போல் கோவில் நடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் கொண்டு தப்பினர்.
இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆறு, கண்மாய், நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை எழுந்துள்ளது.
- லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் வீரையா, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் பாண்டி, சிங்கம்புணரி ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஸ்டாலின், ஸ்தாபன செயலாளர் லீலாவதி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரங்கையா ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் காளைலிங்கம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துசாமி, திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
- திருப்பத்தூரில் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதற்குடியோன் சமூக வளர்ச்சி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு முப்பெரும் விழாவாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா, 10, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, மேல்நிலை கல்வி முடித்தோருக்கு உயர்கல்வி வழிகாட்டல் விழா நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கலைமகள் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விராமதி ஆராயி கருப்பையா, மாதவராயன்பட்டி பானுமதி சேது முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுப்பிரமணியன் வரவேற்றார்.
சென்னை சுங்கத்துறை இணை கமிஷனர் பாண்டியராஜா சிறப்புரையாற்றினார், ஆசிரியர் பால்ராஜ், சமூகவியலாளர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள் மனோகரன், நடராஜன், கணோசன், அழகுமணி, ரமேஷ், மற்றும் பாலமுருகன் ஆகியோர் பேசினர். விழாக்குழுவினர் சந்திரசேகர், விஸ்வநாதன், அண்ணாதுரை, பாண்டியன், ரவி, சரவணன், ஆசைத்தம்பி, காமராஜ், பழனிக்குமார், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாணிக்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர். கல்லல் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.
- சிவகங்கை அருகே பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக்கோரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
- பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு அபூபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாசலில் நிர்வாகிகள் தேர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து தாங்கள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
இந்த பள்ளிவாசல்நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஜமாத்தார்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு வக் வாரியம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.
எனவே உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தேவகோட்டை அருகே கண்டதேவி கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 5-ம் நாள் அன்று அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்டது.
இக்கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் ஆனி திருவிழாவில் கண்டதேவி கிராமத்தை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழாவிற்கு இன்று காலை கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காப்பு கட்டிய 10 நாட்களும் தினந்தோறும் காலை, இரவு சுவாமிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
5-ம் நாள் அன்று அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் 9-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும்.
இக்கோவிலில் தேர் பழுதானதால் கடந்த சில ஆண்டுகளாக தேேராட்டம் நடைபெறவில்லை. தற்துபோது புதிய தேர் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தேர்த் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் பள்ளிக்கூட ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகரில் குண்டூர்ணிக்கரை, கோட்டை முனியாண்டி கோவில், வாரச்சந்தை, செக்கடி ஊரணி கரை ஆகிய இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 40 ஆண்டு பாரம்பரிய மிக்க மன்னர் துரைசிங்கம் மேல் நிலைப்பள்ளி பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடிங்களை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பாதையை மீட்கவும் நகராட்சி தலைவர் சி. எம். துரை ஆனந்த் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை சர்வேயர் மூலம் அளந்து அளவீடு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் திலகவதி, துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான் ராமதாஸ் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
- முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.
தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.
இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
- கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என லெக்டர் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000-மும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000-மும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000-மும், இளங்கலை பட்டம் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6,000-மும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.7,000-மும், ஆண்டொன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 75 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3,000-மும், இளங்கலை பட்டம், பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.5,000-மும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6,000-மும், ஆண்டொன்றுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார்அட்ைட, குடும்பஅட்டைநகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், 9-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகல் (40 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்) 9-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் வாசிப்பாளரின் விவரம் ஆகிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராகவானந்தத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
ராகவனந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது ராகவானந்தம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ராகவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடு புகுந்து வாலிபரை கொலை செய்தது ஏன் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கலெக்டர் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இதுகுறித்து சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்ப கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை உண்மை என நம்பிய சர்மிளா ரூ.10 ஆயிரத்தை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல் அடிக்கடி குறுஞ்செய்தி வரவே 30 தவணைகளில் ரூ.10 ஆயிரம் என ரூ.3 லட்சத்தை அனுப்பினார். இது குறித்து சந்தேகம் அடைந்த சர்மிளா கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது அது போலியான கணக்கு என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த போலி செல்போன் கணக்கு பீகார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கலெக்டர் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆவின் சேர்மனும், மாவட்ட பேரவை செயலாளருமான அசோகன், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






