என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் உதவி மையம் திறப்பு
- சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் உதவி மையம் திறப்பு விழா நடந்தது.
- மக்கள் உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுக்களின் வசதிக்காக கலெக்டர் மதுசூதன்ரெட்டி மக்கள் உதவி மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும், நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் மக்கள் உதவி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் உதவி மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி இடங்களை விட குறைந்த செலவில் நகல் எடுத்துத்தருவது, லேமினேசன் மற்றும் ஸ்பைரல் பைண்டிங் செய்து தருதல், கணினி சம்பந்தமான சேவைகள் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து அதன்மூலம் சரியான அலுவலகத்திற்கு செல்ல வழிவகை செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அலுவலர்களை சந்திக்க அழைத்துச் செல்லுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மக்கள் உதவி மையமானது அரசு வேலைநாட்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட உள்ளது. பொதுமக்கள் மக்கள் உதவி மையத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாார்.ந்த நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் அமைப்பின் தன்னார்வ லர்கள் உடனிருந்தனர்.






