என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த கடைக்கு சீல்
- கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை ெரயில் நிலையம் செல்லும் பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மீன் கடைகளால் துர்நாற்றம் வீசுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை யடுத்து மீன் கடை களை ஆய்வு செய்து அதில் வைக்கப்பட்டிருந்த அழு கிப்போன மீன்களையும், நண்டுகளையும் சிவகங்கை நகரசபை தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன், சுகாதார அலுவலர் முத்துகணேஷ், கவுன்சிலர்கள் அயூப்கான், சீமான் கார்த்திகேயன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். தரமற்ற மீன்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Next Story






